Sunita Williams: கடந்த 9 மாதங்களாக விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ், “நான் எப்படி நடக்கவேண்டும் என்பதை மறந்துவிட்டேன்” என்று கூறியுள்ளார்.
விண்வெளி ஆராய்ச்சிக்காக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏவப்பட்ட ஸ்டார்லைனர் விண்கலமானது, விண்வெளி பயணங்களை சோதனை செய்யும் வகையில் இரண்டு விண்வெளி வீரர்களான இந்திய வம்சாவளியைச் சேண்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றொரு வீரர் புட்ச் வில்மோர் ஆகியோரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு சென்றது. ஆனால், விண்கலத்தில் எரிபொருள் கசிவு உள்ளிட்ட கோளாறு கண்டறியப்பட்டது.
ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட சிக்கல்களால் ஸ்டார்லைனரின் விண்கலத்தில் பயணித்த மூத்த நாசா விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரை உடனடியாக, விண்வெளியில் இருந்து திரும்ப அழைத்து வருவதில் சிக்கல் எழுந்தது.இந்நிலையில், போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலமானது, பாதுகாப்பு காரணங்களால் விண்வெளி வீரர்கள் இல்லாமல் , விண்கலம் மட்டும் தனியாக திரும்பியது.
இதையடுத்து, சிக்கல்களை சரிசெய்ய போயிங் மற்றும் நாசா தீவிரமாக முயற்சித்தும் பலனளிக்கவில்லை. இந்த சிக்கல்களால் ஸ்டார்லைனரின் விண்கலத்தில் பயணித்த நாசா விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் உடனடியாக திரும்ப அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்களை பூமிக்கு கொண்டு வர எலன் மஸ்க்கிஸ்ர்க்குச் சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ டிராகன் விண்கலமானது, சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றது. இதன் மூலம் வில்மோர் மற்றும் வில்லியம்ஸுடன் பூமிக்குத் திரும்ப திட்டமிட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
இவர்கள் 2 பேரும் இந்த மார்ச் மாதம் 19 அல்லது 20 ஆம் தேதி பூமி திரும்புவார்கள் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், விண்வெளியில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சுனிதா வில்லியம்ஸ், எப்படி நடப்பது என்பது குறித்து நான் யோசித்து பார்க்கிறேன், மீண்டும் நினைவுக்கு கொண்டுவர முயற்சிக்கிறேன் என தெரிவித்தார். மேலும், இங்கிருந்து விண்வெளியை பார்ப்பது உற்சாகமாக இருக்கிறது. இங்கு தூங்குவது மிக எளிது. மேலும், இங்கு இருப்பதற்கு நம்பிக்கை மிகவும் முக்கியம் எனவும் வில்மோர் தெரிவித்தார்.
நடப்பது ஏன் கடினமாகிறது? ஈர்ப்பு விசை இல்லாமல், விண்வெளியில் நீண்ட நேரம் செலவிடுவதும் அண்ட கதிர்வீச்சுக்கு ஆளாவதும் அவர்களின் ஆரோக்கியத்தில் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நுரையீரல் நிபுணரும் விமானப்படை வீரருமான வினய் குப்தா கூறுகையில், விண்வெளி வீரர்கள் முழுமையாக தங்கள் வலிமையை மீட்டெடுக்க முழுமையாக 6 வாரங்கள் வரை ஆகலாம். அவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று மீண்டும் நடக்க கற்றுக்கொள்வதுதான் என்று கூறியுள்ளார்.