fbpx

’5 வருஷமா படுத்த படுக்கையா இருக்கேன்’..!! ’தப்பான ஆப்ரேஷன் பண்ணிட்டாங்க’..!! இயக்குனரின் மனைவி வேதனை..!!

தமிழ் சினிமாவில், குடும்பங்களுடன் பார்த்து ரசிக்கும்படியான, ஃபீல் குட் மூவிஸை இயக்கி, தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கியவர் இயக்குனர் விக்ரமன். இவரின் மனைவி ஜெயப்பிரியா 5 ஆண்டுகளுக்கு மேலாக படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். இதுகுறித்து, ஜெயப்பிரியா, தனியார் மருத்துவமனை செய்த தவறால், தனது நிலைமை இப்படி ஆகிவிட்டதாக தெரிவித்திருந்தார்.

இதனால், அந்த மருத்துவமனை தற்போது மிரட்டுவதாக அவர் வேதனையை பகிர்ந்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், எனக்கு முதுகு வலி இருந்ததால், மருத்துவமனைக்கு சென்றேன். அங்கே சிடி ஸ்கேன், ஸ்கேன் என பரிசோதனை செய்துவிட்டு, இது கேன்சர் போல இருக்கு. இதனால், பயாப்சி செய்து பார்க்கலாம் என்று சொன்னார்கள். முதலில் இந்த ஆப்ரேஷனுக்கு நான் ஒத்துக்கொள்ளவில்லை. கேன்சராக இருக்குமோ என்பதால், என் கணவர் மிகவும் பயந்துவிட்டதால், அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தார்.

ஆப்ரேஷன் வெறும் அரைமணி நேரம் மட்டுமே நடக்கும் என்று சொன்னார்கள். ஆனால், மூன்றரை மணி நேரத்திற்கு மேல் நடந்தது. அவர்கள் என்ன செய்தார்கள் என்று யாருக்கும் தெரியாது. 10 நாள் கழித்து என் கால் விரலை என்னால் அசைக்கவே முடியவில்லை. பிறகு, ஒரு மாதம் மருத்துவமனையில் என்னை வைத்துவிட்டு வீட்டுக்கு போய், பிசியோதெரபி செய்து கொள்ளுங்கள் என்று அனுப்பிவிட்டார்கள்.

மருத்துவமனை தவறான ஆப்ரேஷன் செய்துவிட்டு, அதன் பிறகு எனக்கு எந்த விதமான உதவியையும் செய்யவில்லை. இந்த விஷயத்தை நான் அண்மையில் மீடியாவில் சொன்ன பிறகு, அந்த மருத்துவமனை தரப்பில் இருந்து என்னை தொடர்பு கொண்டு, எங்கள் மருத்துவமனை பற்றி ஏன் மீடியாவில் தவறாக சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்று மிரட்டுகிறார்கள். நான் எந்த மீடியாவிலும் மருத்துவமனையின் பெயரை சொல்லவே இல்லை. 5 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்து, மருந்து மாத்திரை என அனைத்தையும் என் கணவர் சொத்துக்களை விற்றுத்தான் கவனித்து வருகிறார்.

இதற்காக அந்த மருத்துவமனையிடம் நாங்கள் நஷ்ட ஈடு கூட வாங்கவில்லை. மாலை நேரம் வந்தால் காலெல்லாம் என் கால் எரிய தொடங்கிவிடுகிறது என்று ஜெயப்பிரியா தனது வேதனையை கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்.

Read More : ’டெல்லி அரசியல் எனக்குப் பிடிக்காது’..!! ’2026இல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி உறுதி’..!! அண்ணாமலை சரவெடி..!!

Chella

Next Post

AI தொழில்நுட்பத்தால் அரசு ஊழியர்களுக்கும் ஆப்பு..!! 84% வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயம்..!!

Sat Mar 23 , 2024
ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இந்தியா போன்ற நாடுகளில் அரசு துறைகளில் 84% வரை வேலை வாய்ப்புகள் பறிபோகும் சூழ்நிலை உருவாகி இருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பல துறைகளில் ஏஐ புகுத்தப்பட்டு வருகிறது. நவீனங்கள் ஒவ்வொன்றாக புகுத்தப்படும் போதெல்லாம் முந்தைய தலைமுறையினர் அதிர்ச்சியடைவது இயல்பு. தட்டச்சு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டபோது எழுத்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். தட்டச்சு செய்ய கணினி அறிமுகப்படுத்தப்பட்டபோது தட்டச்சர்களும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், இப்போது பரவலான செயற்கை நுண்ணறிவு […]

You May Like