’டெல்லி அரசியல் எனக்குப் பிடிக்காது’..!! ’2026இல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி உறுதி’..!! அண்ணாமலை சரவெடி..!!

டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த பாஜக வேட்பாளரும், மாநில தலைவருமான அண்ணாமலைக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ”கோவை பாராளுமன்ற தொகுதியில் 3 வேட்பாளர்களுக்கு இடையே போட்டி கிடையாது. 70 ஆண்டு காலமாக தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிற அதர்மத்திற்கும் மறுபுறம் தர்மத்திற்குமான போட்டி. தமிழக முதல்வரே இங்கு வந்து உட்கார்ந்தாலும் பாஐக வெற்றி பெறும். திமுகவின் எல்லா அமைச்சர்களும் வரட்டும் நாங்கள் தயார். தமிழகத்தின் அரசியல் மாற்றம் கோவையில் இருந்து துவங்க வேண்டும்.

கோவையை இந்தியாவின் மேப்பில் அல்ல, இன்டர்நேசனல் மேப்பில் பதிய வைக்க போகிறோம். தமிழ்நாட்டில் பாஜக சின்னத்தில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கூட்டணி கட்சித் தலைவர்கள் அவர்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இது சரித்திர தேர்தல். தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் வென்று, ஜூன் 4ஆம் தேதி தமிழகத்திலிருந்து சரித்திரம் ஆரம்பமாகும். டெல்லி அரசியலில் எனக்கு விருப்பமில்லை. தமிழக அரசியலில் தான் விருப்பம். மோடி அவர்கள் உத்தரவிட்டதால் போட்டியிடுகிறேன். மோடி அவர்களின் உத்தரவை மதிக்க தெரிந்தவன். 2026ல் எங்களின் பாராளுமன்ற உறுப்பினர்களால் இரண்டு ஆண்டுகளில் என்ன மாற்றம் வந்திருக்கின்றது என்பதை காட்ட வேண்டும். 234 தொகுதிகளிலும் பாஜக உறுப்பினர்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியும்.

தமிழ்நாட்டு அரசியலில் தான் இருப்பேன். டெல்லி அரசியல் எனக்குப் பிடிக்காது. போக மாட்டேன். தமிழ்நாட்டில் 2026இல் ஆட்சி வரவேண்டும் என்றால் இந்த இரண்டு ஆண்டுகளில் முழுவதுமாக தமிழக அரசியலை மாற்றுவது மட்டுமில்லாமல், நிஜ வளர்ச்சி என்ன என்பதை இந்த தேர்தலில் வெற்றி பெற்று காட்டப் போகிறோம் தெளிவான பார்வையோடு இருக்கிறோம்” என்றார்.

Read More : BREAKING | தமிழ்நாட்டில் சுங்கக்கட்டணம் அதிரடி உயர்வு..!! ஏப்.1 முதல் அமல்..!! தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு..!!

Chella

Next Post

40 தொகுதிகளுக்கும் அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்..!! பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!!

Sat Mar 23 , 2024
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 40 தொகுதிகளுக்கும் அதிமுகவுக்கு தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த அறிவிப்பை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதன்படி கோவை, பொள்ளாச்சி நீலகிரிக்கு தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக எஸ்.பி.வேலுமணி நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு, திருப்பூருக்கு செங்கோட்டையன் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது. தென்சென்னைக்கு கோகுல இந்திரா, மத்திய சென்னை தொகுதிக்கு தமிழ் மகன் உசேன், விழுப்புரம் தொகுதிக்கு சி.வி.சண்முகம் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேனி, […]

You May Like