மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஒருவர் தனது மனைவியிடம் 18 ஆண்டுகளாக உறவு இல்லாததால் விவாகரத்து பெற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், கடந்த 2006ஆம் ஆண்டில் திருமணம் செய்துள்ளார். ஆனால், முதலிரவு அன்று வேறொருவரை காதலிப்பதாக அவரது மனைவி கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர், அந்த மாதத்திலேயே வேலைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இதன் காரணமாக அவரின் மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றார். ஆனால், அவர் கணவர் வீட்டுக்கு திரும்பவேயில்லை.
இந்தியாவுக்கு திரும்பிய கணவர் இதனால் மனைவியிடம் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். குடும்ப நீதிமன்றத்தில் அவர் 2011ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கு 2014ஆம் ஆண்டில் தள்ளுபடி ஆனது. ஆனாலும் விடாமல் உயர்நீதிமன்றத்தில் அந்த நபர் மேல்முறையீடு செய்துள்ளார். அவரது மனு மீதான விசாரணையின் முடிவில், தகுதியான காரணம் இன்றி ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு உடலுறவு வைத்துக் கொள்ள ஒரு தலையாக மறுப்பது என்பது, அவரை மனதளவில் கொடுமை செய்யும் அளவுக்கு கொண்டு செல்லும் என நீதிமன்றம் தெரிவித்தது.
அதன் அடிப்படையில் கணவருக்கு விவாகரத்து வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், முறைப்படி நடந்த திருமணத்தில் கணவர் வெளிநாடு என முன்பே முடிவு செய்யப்பட்டுள்ளதை குறிப்பிட்ட நீதிபதி, திருமணம் முழுமை அடைவதற்கான நம்பிக்கையுடன் அவர் இருந்துள்ளார். எனவே இது நிச்சயம் மனதளவில் அவரை கொடுமைப்படுத்தும் செயல் என குறிப்பிட்டார்.