fbpx

இனி 12 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்..!! தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதிய மசோதா நிறைவேற்றம்..!!

தமிழ்நாடு சட்டசபையில் எதிர்ப்புகளுக்கிடையே 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் தற்போது பணி நேரம் 8 மணி என்ற அளவில் உள்ளது. அதாவது எந்த வேலையாக இருந்தாலும் 8 மணி நேரம் மட்டுமே பார்க்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதை தான் 12 மணி நேரமாக மாற்றும் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டப்படி, காலை 7 மணிக்கு அலுவலகம் சென்றால் மாலை 7 மணிக்கு திரும்பும் வகையில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. ஐடி நிறுவனங்கள் சில வைத்த கோரிக்கை காரணமாவும், உற்பத்தியை பெருக்கவும், முதலீட்டை அதிகரிக்கவும் இந்த முறையை கொண்டு வர மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதை தற்போது திமுக கூட்டணி கட்சிகளே சட்டப்பேரவையில் எதிர்த்துள்ளன. தனியார் நிறுவனங்களில் பணி நேரத்தை சட்டசபையில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

சட்டத்தில் என்ன உள்ளது?

இந்த சட்டப்படி ஒரு தனியார் நிறுவனம் தனது ஊழியர்களுக்கான வேலை நிறுத்தத்தை 12 மணி நேரம் வரை நீட்டிக்க முடியும். இதற்கு முன் 8 மணி நேரத்திற்கு மேல் நீட்டிக்க முடியாது என்பது நீக்கப்பட்டு உள்ளது. ஆனால், 12 மணி நேரம் என்பது கட்டாயம் கிடையாது. அதனால் 8 மணி நேரம் கட்டாயம் என்று இருப்பது போல 12 மணி நேரம் கட்டாயம் கிடையாது. 12 மணி நேரம் வேண்டாம் என்றால் ஊழியர்கள் தங்கள் நிறுவங்களிடம் மறுக்க முடியும்.

முதலீட்டை அதிகரிக்க திட்டமா ?

கொரோனாவுக்கு பின்பாக 2022இல் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. 2022ஆம் ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 1 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் பொருளாதார ரீதியாக கடுமையான பின்னடைவை சந்தித்த போதும், பல்வேறு மாநிலங்கள் கடுமையாக கஷ்டப்பட்ட போதும் கூட தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிந்துள்ளன. தமிழ்நாட்டில் முதலீடு அதிகரித்தாலும் ஐடி நிறுவனங்களின் வருவாய் குறைவாக உள்ளது. ஐடி துறையில் பெங்களூரு அளவிற்கு நாம் இன்னும் முன்னேறவில்லை. ஐடி நிறுவனங்களை இங்கே கொண்டு வர கவர்ச்சிகரமான அறிவிப்புகளை நாம் வெளியிட வேண்டும். வேலை நேரத்தை அதிகரிப்பதன் மூலம் ஐடி நிறுவனங்கள் அதிக அளவுக்கு தமிழ்நாடு நோக்கி வரும் என்பதால் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Chella

Next Post

பாத்ரூமில் நிர்வாணமாக கிடந்த மனைவியின் சடலம்..!! கணவரின் காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீஸ்..!!

Fri Apr 21 , 2023
சென்னை வியாசர்பாடி காந்திபுரம் நகரை சேர்ந்தவர் ஜீவா (45). இவர், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சரிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இதற்கிடையே, சரிதா கொருக்குப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். காதலித்து திருமணம் செய்து கொண்டதால் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், ஜீவாவுக்கு மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறு […]
பாத்ரூமில் நிர்வாணமாக கிடந்த மனைவியின் சடலம்..!! கணவரின் காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீஸ்..!!

You May Like