fbpx

’என் புருஷனை விட உன்னதான் ரொம்ப பிடிச்சிருக்கு’..!! யோகா மாஸ்டருடன் உல்லாசமாக இருக்க கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி..!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கடந்த 12ஆம் தேதி குடும்பத்துடன் பைக்கில் வந்த பேக்கரி உரிமையாளரான சிவக்குமார் (42) என்பவரை மர்ம நபர்கள் வெட்டிப் படுகொலை செய்தனர். முதற்கட்ட விசாரணையில், மது அருந்தியவர்களை தட்டிக்கேட்டபோது ஏற்பட்ட தகராறில் சிவக்குமார் கொலை செய்யப்பட்டதாக அவரின் மனைவி காளீஸ்வரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, சிவக்குமாரின் மனைவி காளீஸ்வரியே தன் ஆண் நண்பருடன் இணைந்து இந்தக் கொலையை அரங்கேற்றியிருப்பது அம்பலமாகியுள்ளது. கணவர் சிவக்குமார் தனது மனைவி காளீஸ்வரியை நிர்வாகியாகக் கொண்டு அறக்கட்டளை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

இந்த அறக்கட்டளையில் ஐயப்பன் என்பவர் உறுப்பினராக இருக்கிறார். ஐயப்பன் யோகா மற்றும் தற்காப்புக்கலை பயிற்சியாளர். இவரும், காளீஸ்வரியும் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளனர். தொடர்ந்து ஐயப்பனுடன் இணைந்து வாழ விரும்பிய அவர், அதற்கு இடையூறாக இருக்கும் தன் கணவர் சிவக்குமாரைக் கொலை செய்ய கள்ளக்காதலன் ஐயப்பனுடன் இணைந்து திட்டம் தீட்டியுள்ளார். ஐயப்பன் தன்னுடைய உதவியாளர்களான விக்னேஸ்வரன், மருதுபாண்டி ஆகியோரை அனுப்பி சிவக்குமாரை கழுத்தை அறுத்து செய்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் குறித்த விசாரணையின்போது காளீஸ்வரி முன்னுக்குப் பின் முரணான தகவலைக் கூறியதால், காளீஸ்வரி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் காளீஸ்வரி பயன்படுத்தி வந்த செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில், இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. பின்னர், கணவனை கொலை செய்ய கள்ளக்காதலனை நாடியதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து காளீஸ்வரி, ஐயப்பன் உட்பட கொலையில் தொடர்புடைய விக்னேஸ்வரன், மருதுபாண்டியை ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Chella

Next Post

வெறும் நான்கே மணி நேரம் தான்..!! ஃபுல் சார்ஜ் ஆகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்..!! விலையும் இவ்வளவு கம்மியா..?

Fri Nov 17 , 2023
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில், விரைந்து சார்ஜிங் செய்து கொள்ளும் திறனுடைய மற்றும் நீண்ட தூரம் செல்லக் கூடிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான தேவையும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்திய மார்க்கெட்டில் மேற்கண்ட இரு முக்கிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் உள்ளன. Techo Electra Neo மற்றும் BGauss C12i ஆகிய 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தான் […]

You May Like