fbpx

என் நண்பரை ரொம்ப மிஸ் பண்றேன்!… விஜயகாந்த் குறித்து ரஜினி உருக்கம்!…

Rajinikanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உருக்கமான வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்தாண்டு டிசம்பரில் மறைந்தார். இருவருக்கு அண்மையில் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்ட நிலையில், டெல்லியில் நடைபெற்ற விருது விழாவில் விஜயகாந்த் சார்பாக பிரேமலதா விஜயகாந்த் பத்ம பூஷன் விருதை பெற்றுக் கொண்டார். இந்தநிலையில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உருக்கமான வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், “என்னுடைய அருமை நண்பர் விஜயகாந்த் அவர்களுக்கு பத்மபூஷன் விருது கொடுத்து கவுரவித்ததில் நமக்கெல்லாம் மிகவும் மகிழ்ச்சி. அதுமட்டுமில்லாமல் பத்ம விருதுகள் 2024 புத்தகத்தில் அவருடைய வரலாற்றை பதிவிட்டிருக்கிறார்கள். அது அவருடைய பெயருக்கு இன்னும் பெருமை சேர்க்கிறது.

விஜயகாந்த் நம்மோடு இல்லை என்பதை இன்னும் என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. திடீரென்று தோன்றி பல சாதனைகள் செய்து அப்படியே மறைந்துவிட்டார். இனிமேல் விஜயகாந்த் போன்ற ஒருவரை பார்க்கவே முடியாது. அவரை மிகவும் மிஸ் செய்கிறேன். மதுரையில் பிறந்த மதுரை வீரன் கேப்டன் விஜயகாந்த்” இவ்வாறு ரஜினிகாந்த அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

Readmore: Stomach Cancer | இது அல்சர் இல்ல… வயிற்று புற்றுநோய்..!! உங்களுக்கு இந்த அறிகுறி இருக்கா..?

Kokila

Next Post

’நல்லவேளை இப்படத்துக்கு நிர்வாணம்னு டைட்டில் வைக்கல’..!! ’அவரு ஆம்பளையே இல்ல’..!! கண்கலங்கிய கூல் சுரேஷ்..!!

Thu May 16 , 2024
கன்னி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு நடிகர் கூல் சுரேஷ் பெண் வேடத்தில் வந்தது அனைவரும் ஆச்சர்யமடைய வைத்தது. மாயோன் சிவா தொரப்பாடி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கன்னி’. இந்த படத்தில் அஸ்வின் சந்திரசேகர், மணிமாறன், ராம் பரதன், தாரா க்ரிஷ் என பலரும் நடித்துள்ளனர். மே 17ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த நடிகர் கூல் சுரேஷ் […]

You May Like