பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் சிறுவயதில் தனது புகைப்படம் மார்ஃபிங் செய்யப்பட்டு இணையத்தில் பகிரப்பட்டதை பார்த்து மன வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
போனி கபூர் – ஸ்ரீதேவி தம்பதிக்கு மூத்த மகளாக பிறந்த ஜான்வி கபூர் சிறுவயது முதலே திரை நட்சத்திர பிம்பத்தில் வளர்ந்தவர். தற்போது 26 வயதாகும் ஜான்வி கபூர், ‘மிஸ்டர் – மிஸ்ஸஸ் மகி’, ‘தேவாரா’, ‘உலாஜா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் அண்மையில், பிரபலத்தின் வீட்டில் வளரும் குழந்தையாக இருப்பது மிகவும் கடினம் என்று தெரிவித்திருந்தார்.
செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், அதற்கான உதாரணம் ஒன்றையும் கூறியுள்ளார். அதாவது, 4 வயதின் போது இணையத்தில் மார்ஃபிங் செய்யப்பட்ட தனது புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார். அதனால் பள்ளி உட்பட அனைத்தும் இடங்களிலும் சங்கடங்களைச் சந்தித்ததாக கவலை தெரிவித்துள்ளார்.
யாரோ செய்த தவறை தனது பள்ளியிலும், நண்பர்களும் புரிந்து கொள்ளவில்லை என்று கூறியுள்ள ஜான்வி, தன்னை அனைவரும் வித்தியாசமாக பார்த்ததாக வேதனையுடன் பகிர்ந்துள்ளார். அவரது இந்த கருத்து இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. பாலிவுட் மட்டுமின்றி திரையுலகில் உள்ள பிரபல நடிகைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மார்ஃபிங் செய்து அவதூறாக சித்தரித்து இணையதளங்களில் கசிய விடுவதை சமூக விரோதிகள் சிலர் தொடர்ந்து செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.