மாற்றுத்திறனாளிப் பெண்ணை தம்பி போல் பார்த்துக் கொண்ட இளைஞரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை சேர்ந்தவர் 31 வயது பெண். மாற்றுத்திறனாளியான இவருக்கு காது கேளாமலும், வாய் பேச முடியாமலும் இருந்துள்ளது. மேலும், திருமணம் செய்து கொள்ளாமல், தன்னுடைய பெற்றோருடனே வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தான், பெண்ணின் பெற்றோர், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வெளியில் சென்றுள்ளனர். பின்னர், இரவு வீடு திரும்பிய பெற்றோர், தனது மகள் சோர்வாக இருப்பதை கண்டு அவரிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது, அழுது கொண்டே தனக்கு நேர்ந்த கொடுமைகளை சைகை மொழியில் விவரித்துள்ளார். அதன்படி, அப்பெண்ணின் பெற்றோர், அவர்களது உறவினரின் மகன் விஷாலை (21) சிறு வயது முதலே வளர்த்து வந்துள்ளனர். விஷாலுக்கு பெற்றோர் இல்லை. இதனால், மாற்றுத்திறனாளி பெண்ணின் பெற்றோர், விஷாலுக்கும் பெற்றோர் போல் அனைத்தையும் செய்து வந்துள்ளனர். அடிக்கடி இவர்கள் வீட்டிற்கும் விஷால் சென்று வந்து பாசத்தை வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் தான், பெண்ணின் பெற்றோர் வெளியில் சென்றதை தெரிந்து கொண்ட விஷால், திடீரென அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அப்போது, அந்த பெண் மயக்கமடைந்ததால், பதற்றமடைந்த விஷால், அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். மகள் சொல்வதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனே இதுகுறித்து காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.
இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விஷால் தனது நண்பன் வீட்டில் பதுங்கி இருந்துள்ளான். இந்த தகவல் தெரிந்ததும் போலீசார், அங்கு விரைந்து சென்று விஷாலை பிடித்தனர். அப்போது, விஷால் மதுபோதையில் இருந்துள்ளார். இதையடுத்து, அவரை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும், பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.