fbpx

”நான் சொல்றதை தான் கேட்கணும்”..!! பொதுமேடையில் ராமதாஸ் – அன்புமணி கடும் மோதல்..!! அதிர்ச்சியில் தொண்டர்கள்.!

புதுச்சேரியில் நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

புதுச்சேரியில் பாமக பாமக-வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது, ராமதாஸ் மகள் வழி பேரன் முகுந்தன் பரசுராமனை கட்சியின் இளைஞரணி தலைவராக அறிவித்தார். இதனை, ராமதாஸின் மகனும், கட்சியின் தலைவருமான அன்புமணி ஏற்க மறுத்தார். ‘கட்சியில் சேர்ந்த 4 மாதங்களில் இளைஞரணி தலைவர் பொறுப்பு கொடுக்க வேண்டாம். அவருக்கு என்ன அனுபவம் இருக்கு? களத்தில் இருந்து வேலை செய்ய எத்தனையோ பேர் இருக்கிறார்கள்’ என அன்புமணி முட்டுக்கட்டை போட்டார்.

இதனால் கடுப்பான ராமதாஸ், ”நான் சொல்வதை தான் யாராக இருந்தாலும் கேட்க வேண்டும். இது நான் உருவாக்கிய கட்சி. கேட்காதவர்கள் கட்சியில் இருக்க முடியாது. புரியுதா? கட்சியை விட்டு போவதாக இருந்தால் போ” என கூறினார். அதுமட்டுமின்றி, ‘நான் உருவாக்கிய கட்சி’ என்று ராமதாஸ் 3 முறை திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதற்கு குறுக்கே, ‘நீங்கள் சொல்லுங்கள். பண்ணுங்கள் என்று அன்புமணி பதிலளித்தார். இதனால் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. தந்தையின் பேச்சால் அதிருப்தி அடைந்த அன்புமணி, ‘பனையூரில் தனியாக அலுவலகம் திறந்து இருக்கிறேன். என்னை வந்து சந்திப்பதாக இருந்தால் அங்கு வரலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

Read More : மாணவி வன்கொடுமை விவகாரம்..!! அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடி ஆய்வு..!!

English Summary

A heated argument broke out between PMK founder Ramadoss and PMK leader Anbumani at the PMK special general committee meeting held in Puducherry.

Chella

Next Post

2 தாலி, 2 கணவர்கள்..!! ஒன்றாகவே தூங்குவோம், ஒன்றாகவே சாப்பிடுவோம்..!! குஷியில் மனைவி..!!

Sat Dec 28 , 2024
The three of us are happy in the same house. Wherever we go out, the three of us go together.

You May Like