மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஷீத்தல் போலே (25). இவர் தனது கணவர் மற்றும் 5 வயது மகள், 3 வயது மகனுடன் வசித்து வந்தார். கடந்த மாதம் 31ஆம் தேதி காலை ஷீத்தலின் கணவர் வெளியே சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு வந்தபோது குழந்தைகளை எழுப்ப முயன்றார். அப்போது, குழந்தைகள் அயர்ந்து தூங்குவதாகவும் அவர்களை எழுப்ப வேண்டாம் என்றும் மனைவி தெரிவித்துள்ளார். நீண்ட நேரமாகியும், குழந்தைகள் எந்த அசையும் இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த தந்தை, உடனே மருத்துவமனைக்கு அவர்களை கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைகள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை, கதறி அழுதார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், 2 குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விசாரணை நடத்தியதில் பெற்ற தாயே குழந்தையை கொன்றது அம்பலமானது. இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்திய போது, ஷீத்தலுக்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், அந்த வாலிபர் ஷீத்தலுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், இதற்கு குழந்தைகள் இடையூறாக இருந்ததால் குழந்தைகளை கொன்றதாக தெரிவித்தார். இதையடுத்து, கைது செய்யப்பட்ட ஷீத்தல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு சூப்பர் அப்டேட்..!! கூகுள் நிறுவனத்தின் மாஸ் அறிவிப்பு..!!