ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு சூப்பர் அப்டேட்..!! கூகுள் நிறுவனத்தின் மாஸ் அறிவிப்பு..!!

கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு பைண்ட் மை டிவைஸ் (FIND MY DEVICE) என்ற ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

கூகுள் நிறுவனத்தின் பொறியியல் துறை துணை தலைவரான எரிக் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதில், புதிய நெட்வொர்க் இணைப்புகள் மூலம் ஆண்ட்ராய்டு கருவிகளை இணைத்து ஃபைண்ட் மை டிவைஸ் என்ற சிறப்பு அம்சத்தை அறிமுகம் செய்கிறோம். இதன் மூலம் உங்களது நொந்துப் போன ஆண்ட்ராய்டு கருவிகளை விரைவாகவும், பாதுகாப்பாகவும் உங்களால் மீட்க முடியும் என தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக, ஆண்ட்ராய்டு சாதனம் ஆஃப்லைனில் இருந்தாலும் கூட இந்த அம்சம் சீராக இயங்கும். குறிப்பாக, ஆப்பிள் ஃபைண்ட் மை டிவைஸ் போன்றே, கூகுளின் ஃபைண்ட் மை டிவைஸ் ப்ளூடூத் சிக்னல்களை கொண்டு காணாமல் போன சாதனங்களைக் கண்டறியும். அதேபோல் இதன் மூலம் அருகாமையில் உள்ள ஆண்ட்ராய்டு சாதனங்களில் இண்டர்நெட் இணைப்பு இல்லை என்றாலும் கூட கண்டறிந்து கொள்ளலாம். பல அடுக்கு பாதுகாப்பு கொண்ட முறையில் ஃபைண்ட் மை டிவைஸ் அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் உங்களது தனிப்பட்ட தகவல்களை வேறு யாராலும் அணுக முடியாது. அதாவது உங்களது லொகேஷன் தொடர்பான தரவுகள் எண்ட் டூ எண்ட் என்கிரிப்ஷன் முறையில் சேமிக்கப்படும் என்பதால், உங்களது தனிப்பட்ட தகவல்களுக்கு எந்த ஒரு ஆபத்தும் ஏற்படாது என கூறுகிறார். இந்தியாவில் இந்த அம்சம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. ஆனால் விரைவில் இந்தியாவிலும் இந்த அம்சம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : ’காலையில் எழுந்ததும் இந்த பழக்கம் இருக்கா’..? அப்படினா உங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு..!!

Chella

Next Post

கள்ளக்காதலனுடன் வாழ ஆசை..!! அசையாமல் தூங்கிய குழந்தைகள்..!! கதறி அழுத கணவன்..!! நடந்தது என்ன..?

Fri Apr 12 , 2024
மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஷீத்தல் போலே (25). இவர் தனது கணவர் மற்றும் 5 வயது மகள், 3 வயது மகனுடன் வசித்து வந்தார். கடந்த மாதம் 31ஆம் தேதி காலை ஷீத்தலின் கணவர் வெளியே சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு வந்தபோது குழந்தைகளை எழுப்ப முயன்றார். அப்போது, குழந்தைகள் அயர்ந்து தூங்குவதாகவும் அவர்களை எழுப்ப வேண்டாம் என்றும் மனைவி தெரிவித்துள்ளார். நீண்ட நேரமாகியும், குழந்தைகள் எந்த […]

You May Like