fbpx

எங்கள் திருமணத்தின்போது எனக்கு 40 வயது… என் கணவருக்கு 50 வயது … அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரபல நடிகை ..

சினிமாவைப் பொறுத்தவரை ஏராளமான நடிகர், நடிகைகள் தாமதமாக திருமணம் செய்கின்றார்கள். அந்த வகையில் தற்பொழுது எனக்கு திருமணமாகும் பொழுது 40 வயது அவருக்கு 50 வயது என்று கூறிய பிரபல நடிகை தங்களுடைய வாழ்வில் நடந்த ஏராளமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதாவது 90 காலகட்டத்தில் சின்னத்திரை சீரியல்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகை நிர்மலா. இவர் பெரும்பாலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார். ஒரு கட்டத்திற்கு பிறகு திரைப்படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்ற இவர் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார் தன்னுடைய பிசினஸில் அதிக கவனம் செலுத்தி வந்த இவர் சமீபத்தில் பிரபல பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் தன்னுடைய வாழ்க்கை குறித்து பேசிய இவர் முதல் திருமணம் குறித்து கூறியுள்ளார். அதில் நடிகர் ஜெய்சங்கர் எங்களுடைய உறவினர் தான் அவர் மூலமாக தான் என்னுடையதொலை பேசி எண் கண்டுபிடித்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ,மௌனம் ரவி அவர்கள் என அனைவரும் எங்க வீட்டிற்கு வந்தார்கள். என் அப்பா அம்மாவிடம் என்னை நடிக்க வைக்க சொல்லி கேட்டார்கள் பிறகு அவர்களிடம் எப்படியோ பேசி சமாதானம் வாங்கினார்கள். ஒரே வாரத்தில் முடிவானது தான் புத்தம் புது பயணம் திரைப்படம் எனவே இந்த படப்பிடிப்பின் பொழுது கே எஸ் ரவிக்குமார் சார் என்ன சொல்கிறாரோ அதனை அப்படியே உள்வாங்கி நடிப்பேன்.

அந்த படத்தை இப்பொழுது பார்க்கும் பொழுது ஒரு குழந்தை மாதிரி நடித்திருக்கிறேன் என்று எனக்கு தோணும் அந்த படத்தை தொடர்ந்து புதிய முகம் என்ற படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது அந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தேன் மேலும் அந்த படம் ஹிட்டானது உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு தான் முதல் முதலில் இசை அமைத்து இருந்தார். ஆனால் ரோஜா படம் முதலில் ரிலீஸ் ஆனதால் அந்த படம் அவருடைய முதல் படம் ஆகிவிட்டது.

அப்படியே தொடர்ந்து கன்னடம், மலையாளம் என பிற மொழிகளிலும் நடித்து வந்தேன் நான் முதலில் படத்தில் நடிக்கும் பொழுது பள்ளியில் நான் படித்துக் கொண்டிருந்தேன் இதனால் அப்பா படிப்பு முக்கியம் என்று சொல்லிவிட்டார் இதனால் சினிமாவில் பிரேக் எடுத்தேன் பிறகு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வேறு வழி இல்லாமல் விமான பணிப்பெண் வேலையில் சேர்ந்து பணியாற்றி வந்தேன் பிறகுதான் சீரியல்களின் நடிப்பதற்கான வாய்ப்பை கிடைத்தது.

இவ்வாறு 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்தேன் பிறகு வீட்டில் என்னுடைய திருமணம் பற்றி பேச ஆரம்பித்தார்கள் ஆனால் நான் நிச்சயமாக வீட்டில் பார்க்கும் வரனை திருமணம் செய்ய மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தேன் எப்பொழுது எனக்கானவரை தேடி கண்டுபிடிக்கிறேனோ அப்பொழுது தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். எங்கள் வீட்டில் உறவினர்கள் எல்லோரும் எப்போது திருமணம், எப்போது திருமணம் என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள் இருந்தாலும் என்னுடைய முடிவில் உறுதியாக இருந்தேன். கடைசியாக என்னுடைய 38 வயதில் என்ன கணவரை சந்தித்தேன் இரண்டு வருடங்களாக நண்பராக இருந்தோம் அவர் திருமணமே வேண்டாம் என என்னை பார்ப்பதற்கு முன்னாடி வரையும் சொல்லிக் கொண்டே இருந்தார் பிறகு என்னோட 40 ஆவது பிறந்தநாள் அன்னைக்கு தான் எங்களுடைய நிச்சயதார்த்தம் நடந்தது கல்யாணம் பண்ணும் பொழுது எனக்கு 40 அவருக்கு 50 வயது … பாசிட்டிவ் நெகட்டிவ் என இரண்டு விமர்சனங்களும் எங்களுடைய கல்யாணத்தில் நாங்கள் சந்தித்தோம் பிறகு என்னுடைய கணவர் ஒரு திட்டவடிவமைப்பாளர். அவருடனும் சேர்ந்து வேலை செய்கிறேன். சௌந்தர்யா ரஜினிகாந்த் வீடு நாங்க பண்ணி கொடுத்தது தான் எனவே சமீப காலங்களாக நாங்க பெரிய திட்டங்களை செய்து கொண்டிருக்கிறோம் ’’ என்று நிர்மலா கூறியுள்ளார்

Next Post

கால்சியம் குறைபாட்டால் படுத்த படுக்கையான சிறுவர்கள்.. அரசின் உதவி கேட்கின்றனர்…

Wed Oct 5 , 2022
திருச்சி அருகே மாற்றுத் திறனாளிகளான இரண்டு சிறுவர்கள், தந்தையை இழந்து தாய் மற்றும் சகோதரியுடன் அவதிப்பட்டு வருகின்றனர். தங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்… திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா. எலக்ட்ரீசனாக பணியாற்றி வந்த கருப்பையாவிற்கு சரஸ்வதி, நாகலெட்சுமி என இரு மனைவிகள். முதல் மனைவி சரஸ்வதிக்கு நாகதேவி என்ற மகளும், 17 வயதில் மணிகண்டன், 16 வயதில் நந்தகுமார் என்ற […]

You May Like