fbpx

’அடிபட்டு நிறைய காத்துக்கிட்டேன்’..!! படிப்பு குறித்து நடிகர் அஜித் என்ன சொல்லியிருக்காரு தெரியுமா..?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜோவிகா – விசித்ரா இடையே கடும் மோதல் ஏற்பட்டது. படிப்பு அனைவருக்கும் ரொம்ப முக்கியமான விஷயம் என விசித்ரா கூறினார். ஆனால், தன்னுடைய படிப்பு குறித்து பேச வேண்டாம் என ஜோவிகா கூற, இது கடுமையாக வாக்குவாதமாக மாறியது. சிலர் ஜோவிகா பேசியது சரி தான் என கூறி வருகின்றனர். ஆனால், பலரும் விசித்ரா பேசியதில் எந்த ஒரு தவறும் இல்லை என அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

இந்நிலையில், படிப்பு எவ்வளவு முக்கியம் என்பது குறித்து நடிகர் அஜித் பேசிய பழைய ஆடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில், ‘படிப்பு மிகவும் அவசியம், நான் 10ஆம் வகுப்பு வரை தான் படித்து இருக்கிறேன். அடிபட்டு நிறைய காத்துக்கிட்டேன். படிப்பு அறிவு, பட்ட அறிவு என கூறுவார்கள். நான் பட்டு தான் கற்றுக்கொண்டேன்’.

‘அது யாருக்கும் வேண்டாம், ரொம்ப கடினமான வழி. இப்போ நான் உணருகிறேன் ஏன் படிக்கவில்லை என்று. அப்போது எனக்கு படிப்பு ஏறவில்லை. அது வேறு விஷயம். ஆனால், இன்று நான் உணருகிறேன் படித்து இருந்திருக்கலாமோ என்று’ என பேசியிருக்கிறார். அஜித் பேசிய இந்த பழைய ஆடியோ, பிக்பாஸ் சர்ச்சைக்கு பின் ரசிகர்களால் அதிகம் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Chella

Next Post

உடல் ரீதியாக தொல்லை..!! 3 பேராசிரியர்கள் தான் காரணம்..!! தூக்கில் தொடங்கிய மருத்துவ மாணவி..!!

Sun Oct 8 , 2023
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் தூத்துக்குடியைச் சேர்ந்த சிவகுமார் என்பவரது மகள் சுஜிர்தா (27) என்பவர் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு, எம்டி மருத்துவ பட்ட மேற்படிப்பு 2ஆம் ஆண்டு பயின்று வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வரும் இவர், கல்லூரிக்கு வராததால் சக மாணவிகள் விடுதி அறைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் மயங்கிய […]

You May Like