fbpx

‘சிஎஸ்கே அணியை வீழ்த்தியதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன்’..!! விடிய விடிய நடந்த பார்ட்டி..!!

சிஎஸ்கே அணியை வீழ்த்தியதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் என்று ஆர்.சி.பி அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாள் கூறியுள்ளார்.

கடந்த மார்ச் 18ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 68-வது லீக் போட்டியில் விளையாடிய ஆர்சிபி அணி சிஎஸ்கேவை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பெற்றது. அதோடு இப்போட்டியில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் என்கிற நிலையில், சிஎஸ்கே வெற்றிபெறும் என்றே பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர். ஆனால், இந்த தொடரின் முதல் பாதியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு அணி பிற்பகுதியில் மிகச் சிறப்பான செயல்பாடுகளை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று வந்தது. அதோடு சென்னை அணியையும் 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 4-வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

இருந்தாலும் பெங்களூரு அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தானிடம் தோல்வியை சந்தித்து தொடரில் இருந்து வெளியேறியது. பெங்களூரு அணி இந்த நாக் அவுட் போட்டியில் தோல்வியை சந்தித்திருந்த போதிலும், கடைசியாக நடைபெற்ற லீக் போட்டியில் சிஎஸ்கே வீழ்த்தியபோது அவர்கள் மைதானத்தில் கோப்பையை வென்றது போல் கொண்டாடியது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியது. மேலும், சென்னை அணியின் வீரர்கள் ஆர்.சி.பி. அணியின் வீரர்களுக்கு போட்டி முடிந்த பின்னர் கை கொடுக்க நீண்ட நேரம் காத்திருந்தும் அவர்கள் தொடர்ச்சியாக வெற்றியை கொண்டாடியதும் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது.

மேலும், ஆர்.சி.பி அணியின் இந்த கொண்டாட்டம் தவறான ஒன்று என்றும் பல்வேறு முன்னாள் வீரர்களும் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். கூடவே, ஐபிஎல் கோப்பையை வென்றது போல இப்படி ஒரு தனி அணிக்கு எதிராக பெற்ற வெற்றியை கொண்டாடுவதா? என்ற பேச்சுக்களும் இருந்து வந்தது. இந்நிலையில், இந்த சிஎஸ்கேவுக்கு எதிரான வெற்றிக்கு பின்னர் விடியற்காலை 5 மணி வரை ஆர்.சி.பி. வீரர்கள் பார்ட்டி செய்ததாக ஆர்.சி.பி அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாள் சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதன்படி, அவர் கூறுகையில், “சிஎஸ்கே அணியை வீழ்த்தியதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். முதல் பந்தில் தோனி சிக்ஸர் அடித்தபோது என்னை கட்டுப்படுத்திக்கொண்டு கிரீஸில் யார் இருந்தாலும் அதை பற்றி எல்லாம் நினைக்காமல் தைரியமாக பந்து வீசியதாக கூறினார். ஏற்கனவே ஆர்சிபி அணி வீரர்கள் சென்னை அணிக்கு எதிராக கொண்டாடிய வெற்றி கொண்டாட்டம் தவறு என்று பலரும் பேசிவரும் நிலையில், விடிய விடிய 5 மணி வரை அந்த வெற்றியை கொண்டாடியதாக யாஷ் தயாள் வெளிப்படையாக உளறி மாட்டிக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More : தமிழ்நாட்டில் ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறப்பு..!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

English Summary

RCB’s star fast bowler Yash Dayal said that he was very happy to beat CSK.

Chella

Next Post

ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறப்பு..!! தூய்மைப் பணிகளை மேற்கொள்ள உத்தரவு..!!

Fri May 24 , 2024
Cleanliness should be carried out in schools to ensure the safety of students.

You May Like