fbpx

”3 மாதம் ஏலியன்கள் கட்டுப்பாட்டில் இருந்தேன்”..!! ’2 பேரை பார்த்தேன்’..!! பகீர் கிளப்பிய அமெரிக்க முன்னாள் அதிகாரி..!!

அமெரிக்கா போன்ற நாடுகளில் அவ்வப்போது ஏலியன்கள் பறக்கும் தட்டுக்களில் வந்ததாகவும், அதை நேரில் பார்த்ததாகவும் கூறி பரபரப்பை கிளப்புவார்கள். இன்று வரை யுஎப்ஓ, ஏலியன்கள் குறித்த விஷயங்கள் வெறும் வாய்வழி செய்திகளாக தான் நாம் அறிந்து வருகிறோம். பூமியை போல் வேற்று கிரகங்களில் மனிதர்கள் வாழ்கிறார்களா? என்பதை அறிவதற்கான ஆய்வுகளை ஒவ்வொரு நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டரில் பைலட் ஆக பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி அலெக்ஸ் கொல்லியர் என்பவர் கூறுகையில், ”சிறு வயதில் தன்னை ஏலியன்கள் தூக்கிச்சென்றனர். அவர்களின் கட்டுப்பாடில் 3 மாதங்கள் இருந்தேன். 1960களிலேயே இந்த சம்பவம் நடைபெற்றது. இரண்டு ஏலியன்களிடம் பேசினேன். அவர்களிடம் பேச தனக்கு ஸ்பெஷல் பெல்ட் ஒன்று அணிவிக்கப்பட்டது.

தனது தாத்தாவின் இல்லத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது ஏலியன்கள் என்னை தூக்கிச் சென்றனர், தூக்கத்தில் இருந்து விழித்த போது ஒரு இருட்டறையில் கிடந்தேன். அங்கு விசாசுயேஸ் மற்றும் மோரோனேய் என்ற இரண்டு ஏலியன்களை நான் பார்த்தேன். அவர்களின் பறக்கும் தட்டுக்களில் 3 மாதங்கள் இருந்தேன். இதை பூமியின் நேரத்தில் ஒப்பிட்டால் வெறும் 18 நிமிடங்கள்தான். அப்போது வேற்றுகிரகவாசிகள் என்னிடம், இந்த பிரபஞ்சத்தில் மனிதர்கள் மட்டுமே இல்லை. பல கிரகங்களில் ஏலியன்கள் வசிக்கிறார்கள் என்று தெரிவித்தனர்.

நான் ஆண்ட்ரோமெடியன்ஸ் என்ற அந்த இரு வேற்றுக்கிரகவாசிகளிடம் மனிதர்கள் எந்த அளவிற்கு டெக்னாலஜியில் முன்னேற்றம் அடைந்து இருக்கின்றனர் என்று கேட்டேன். அதற்கு அமெரிக்க ராணுவம் நினைப்பதை விட 400 ஆண்டுகள் அட்வான்ஸ்டு டெக்னாலஜியை கொண்டு இருப்பதாக கூறினார்கள். விரைவில் மனிதர்கள் ஏலியன்கள் எச்சங்கள் அதாவது ஏலியன்கள் இருப்பதற்கான சான்றுகளை கண்டுபிடிப்பார்கள்” என்றும் கூறியுள்ளார்.

Chella

Next Post

’தமிழ்நாட்டில் அரசியல் செய்பவர்களுக்கும் இந்த விஷயம் தெரியும்’..!! பகீர் கிளப்பிய அண்ணாமலை..!!

Thu Feb 8 , 2024
2024 தோ்தல் களம் வித்தியாசமானது. பிரதமா் மோடிதான் வெற்றிபெறுவாா் என்று தெரிந்து நடைபெறும் தோ்தல் இது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், ”2024 நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றிபெற்று பிரதமராக மோடி வரவேண்டும் என்ற ஒருமித்த எண்ணத்தில், அதிமுகவை சேர்ந்தவர்கள் பாஜகவில் இணைந்துள்ளனா். பாஜகவில் ஒரு கட்சி (அதிமுக) இணையுமா என்று மத்திய உள்துறை அமைச்சரிடம் நாளிதழ் ஒன்றின் பேட்டிக்காக கேள்வி கேட்கப்பட்டது. […]

You May Like