fbpx

நண்பர் என்று குறிப்பிட்டு பாராட்டிய ரஜினி.. சசிகுமார் நெகிழ்ச்சி…

சசிகுமார் , யஷ்பால் சர்மா, பிரீத்தி அஸ்ரானி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் அயோத்தி. அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இப்படத்தை இயக்கி இருந்தார். மனிதத்தையும் மத நல்லிணக்கத்தையும் பேசிய இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.. இந்தப் படம் இந்தி மற்றும் தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அயோத்தி படத்தை பாராட்டியுள்ளார். தனத் ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் “ அயோத்தி… நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம். முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்.” என்று குறிப்பிட்டுள்ளார்..

ரஜினியின் இந்த பாராட்டுக்கு சசிகுமார் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.. தனது ட்விட்டர் பதிவில் “ நடிகர் எனக் குறிப்பிடாமல், நண்பர் என்று சொன்னதிலேயே மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் சார். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், மிக எளிய படைப்பாக வந்திருக்கும் அயோத்தி படத்தை பார்த்துப் பாராட்டியது நல்ல படைப்புகளுக்கான பெரிய நம்பிக்கை கொடுக்கிறது மிக்க நன்றி சார்..” என்று குறிப்பிட்டுள்ளார்..

Maha

Next Post

சிஎஸ்கே அணியை தடை செய்ய வேண்டும்.. பாமக கோரிக்கை.. என்ன காரணம் தெரியுமா..?

Tue Apr 11 , 2023
சிஎஸ்கே அணியை தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக கோரிக்கை விடுத்துள்ளது.. தமிழக சட்டப்பேரவையில் விளையாட்டு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.. அப்போது பாமக எம்.எல்.ஏ வெங்கடேஸ்வரன், சிஎஸ்கே அணியை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.. இதுதொடர்பாக பேசிய அவர் “ தமிழகத்தில் திறமையான வீரர்கள் இருந்தும் ஒருவரை கூட சிஎஸ்கே அணி செய்யவில்லை.. ஆனால் தமிழர்களே இல்லாமல் தமிழக அணி […]

You May Like