fbpx

”அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு நானே கூட போட்டியிடுவேன்”..! முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி..!

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு நானே கூட போட்டியிடுவேன் என்று முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் திருச்சியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்தே எம்.ஜி.ஆர் உடன் நான் பயணித்திருக்கிறேன். ஜெயலலிதாவின் முதல் அமைச்சரவையில் 5 ஆண்டுகாலம் அமைச்சராக இருந்திருக்கிறேன். அதன்பிறகு சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். தற்போது அதிமுகவில் நடக்கும் அனைத்து விஷயங்களும் என்னை பெரிதும் வாட்டுகின்றன.

Tamil Nadu: Indicating OPS is no longer AIADMK coordinator, EPS says his  letter on local body polls invalid | Cities News,The Indian Express

பெரியகுளம் தொட்டு எம்.ஜி.ஆர் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அவருடன் பயணித்துள்ளேன். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் ஜெயலலிதா அதிமுகவை நடத்த முற்பட்ட போது, திருச்சி மாவட்டத்தில் இருந்து ஜெயலலிதாவை ஆதரித்த ஒரே ஒரு பொதுக்குழு உறுப்பினர் நான் மட்டும் தான். இவரது காலம் என்பது மிகவும் சிறப்பாக இருந்தது. சொன்னவற்றை எல்லாம் செய்து காட்டினார். இவரது மறைவுக்கு பின் இரட்டை தலைமை வந்தது. நானெல்லாம் மகிழ்ச்சி அடைந்தேன். ஏனெனில் 1985இல் சத்யா ஸ்டூடியோவில் இரண்டு நாட்கள் பொதுக்குழு நடைபெற்றது. அதில் செயலாளர்களுக்கு மட்டுமே இடமளிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய எம்.ஜி.ஆர், என்னுடைய காலத்திற்கு பின்னர் என்றாவது ஒருநாள் ஒரு தொண்டன் இந்த இயக்கத்தை தலைமையேற்று நடத்துவான் என்று சொன்னால் அன்று தான் என்னுடைய ஆத்மா சாந்தியடையும் என்று கூறினார்.

In Srirangam constituency K.P. Krishnan files nomination | ஸ்ரீரங்கம்  தொகுதியில் கு.பா. கிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்

அதை நினைவில் கொண்டு இரட்டை தலைமையில் இரண்டு தொண்டர்கள் பதவிக்கு வந்த போது பெரிதும் மகிழ்ந்தேன். தலைவரின் வாக்கு பலித்து விட்டது என்று. இரட்டை தலைமையை முடிவு செய்தது நீங்களே. இதைப் பற்றி தொண்டர்கள் யாரிடமும் கேட்கவில்லை. தற்போது ஒற்றை தலைமை வேண்டும் எனக் கூறிக் கொண்டு ஒருவரை வெளியே போக வேண்டும் என்றால் இது நியாயமா? நான் யாருக்கும் ஆதரவு இல்லை. பொதுச்செயலாளர் பதவிக்கு நானே கூட போட்டியிடுவேன்” என்று அவர் தெரிவித்தார்.

Chella

Next Post

TET தேர்வு முடிவுகள் வெளியீடு...! ஆன்லைன் மூலம் எப்படி பார்ப்பது...? தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!

Tue Jul 5 , 2022
முதுகலை ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது; 2020-21-ம் ஆண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர் உடற்கல்வி இயக்குநர் நிலை ஒன்று கம்ப்யூட்டர் பயிற்றுநர் நிலை ஒன்று பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் 2022-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட்டன. […]

You May Like