fbpx

TET தேர்வு முடிவுகள் வெளியீடு…! ஆன்லைன் மூலம் எப்படி பார்ப்பது…? தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

முதுகலை ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது; 2020-21-ம் ஆண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர் உடற்கல்வி இயக்குநர் நிலை ஒன்று கம்ப்யூட்டர் பயிற்றுநர் நிலை ஒன்று பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் 2022-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட்டன. அதன் மீதான உத்தேச விடை குறிப்புகள் 2022-ம் ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி வெளியிடப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட உத்தேச விடை குறிப்பின் மீது வாட்ஸ்அப் மூலம் வினைகளை ஏப்ரல் மாதம் 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரியம் பெற்றது. அப்போது 29,141 விண்ணப்பதாரர்கள் ஆட்சேபனை தெரிவித்திருந்தனர்.

பகுதி பாடவாரியாக மட்டுமே பாட வல்லுனர்கள் அழைக்கப்பட்டு விடை குறிப்பினை மறு ஆய்வு செய்யும் பணி மே மாதம் 10-ம் தேதி முதல் ஜூன்15-ம் தேதி வரை நடைபெற்றது.தேர்வு நடைபெற்ற பாடங்களுக்கு அந்த தேதிகளில் அனுப்பியவர்களின் விவரங்கள் ஆட்சேபனைகள் பாடவாரியாக பெறப்பட்டது. அதன் அடிப்படையில் இறுதி விடைக்குறிப்புகள் தயார் செய்யப்பட்டு, மதிப்பெண்கள் http://trb.tn.nic.in/pg2021/04072022/msg.htm வெளியிடப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் தெரிந்துக் கொள்ளலாம். மேலும் இறுதி விடைக்குறிப்புகள் http://trb.tn.nic.in/pg2021/04072022/msg.htm என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Also Read: “அடுத்த ஷாக் நியூஸ்” ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணம் ரூ.25லிருந்து ரூ.30 ஆக உயர்த்தப்படும்…! போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு…!

Vignesh

Next Post

மக்களே கவனம்...; இனி உணவகங்களில் இதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமாம்...! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு...!

Tue Jul 5 , 2022
நுகர்வோர் உரிமைகளை மீறும் வகையிலும், முறையற்ற வர்த்தக நடைமுறையை தடுக்கும் வகையிலும், உணவகங்கள் சேவை வரியை விதிப்பது தொடர்பாக, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது குறித்து மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; உணவு உண்டதற்கான விலை ரசீதுகளில் உணவகங்கள் சேவை வரியை தாமாக சேர்க்கக்கூடாது என்றும், வேறு எந்த ஒரு பெயரிலும் சேவை வரியை வசூலிக்கக்கூடாது […]

You May Like