fbpx

’2026இல் நான் தான் முதலமைச்சர்’..!! ’என் மனைவி சொல்லிவிட்டார்’..!! – ச.ம.க. தலைவர் சரத்குமார்

சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், பிரபல நடிகருமான சரத்குமார் சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் மேடையில் பேசும் போது, என் மனைவி இப்படி சொல்லிவிட்டார். அதனால் நான் 2026இல் முதலமைச்சர் ஆகுவேன் என கூறியிருக்கிறார்.

தமிழ் சினிமா திரையுலகில் பல வெற்றி படங்களில் நடித்த நடிகர் சரத்குமார் தற்போது தனக்கு முதலமைச்சர் ஆசை வந்துவிட்டதாக பேசியிருக்கிறார். அதாவது “2026ஆம் ஆண்டு நான் கட்டாயம் முதலமைச்சர் ஆவேன் என்று என் மனைவி கூறுகிறார். என் மனைவியின் தாயாருக்கு 85 வயது மாப்ளே நீங்க சி.எம்.ஆகுறதை நான் பாக்கனும்’ என்று என் மாமியாரும் கூறுகிறார். நான் ஏன் முதலமைச்சர் ஆகக்கூடாது? நான் சீரியஸாக கேட்கிறேன். எனக்கும் முதலைச்சர் ஆசை வந்துவிட்டது என பத்திரிகையாளர்கள் போட்டுக்கொள்ளலாம்.

உங்களுக்கு வந்தா எனக்கும் வரும், யார் யாருக்கோ வரலாம் எனக்கு வரக்கூடாதாம். எனக்கு வந்தா மட்டும் காமெடியாம் மத்தவங்களுக்கு வந்தா சீரியசாம். ஆனா, நான் காமெடியா பேசுறேன்னு நினைக்காதீங்க ரொம்ப சீரியசானவன் நான். ஒரு நாள் என்னிடம் கேட்டாங்க நீக்க சாக்லேட் பேபியா ரகட் பேபியானு. நான் சொன்னன் ரகடா தெரியுற சாக்லைட் பேபினு. மனசு சுத்தம் நானும் முதலமைச்சர் ஆகுவேன்” என பேசினார்.

Chella

Next Post

"இளம் பெண் கதற கதற.."! நிர்வாணப்படுத்தி சாராயம் ஊற்றி எரித்துக் கொலை.!பாஜக ஆளும் மாநிலத்தில் மீண்டும் கொடூரம்.!

Mon Dec 11 , 2023
மத்திய பிரதேசம் மாநிலத்தில் இளம் பெண் கற்பழிக்கப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் நகரில் புதியதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் பாதி எரிக்கப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் நிர்வாண சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். […]

You May Like