fbpx

’இந்த தொகுதியில் தான் போட்டியிடுவேன்’..!! விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு..!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ”தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்தியா கூட்டணியை உருவாக்குவதற்காக கடந்த சில ஆண்டுகளாக கணிசமான பங்களிப்பு செய்துள்ளது. இந்தியா கூட்டணி வெல்லும் என்கிற அடிப்படையில் ‘வெல்லும் ஜனநாயகம்’ என்ற மாநாட்டை அடுத்த மாதம் டிசம்பர் 23-ம் தேதி திருச்சியில் நடத்த திட்டமிட்டு உள்ளோம்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணத்தில் அ.தி.மு.க, பா.ம.க.வை சேர்ந்த தொண்டர்கள் தான் பங்கேற்று வருகின்றனர். அண்ணாமலையோடு நடந்து செல்பவர்கள் பாஜக தொண்டர்கள் இல்லை. தமிழகத்தில் பாஜக எந்த காலத்தில் ஆட்சிக்கு வராது. பாஜகவில் இருக்கும் எம்எல்ஏக்கள் அதிமுகவின் வாக்குகளை பெற்றுத்தான் எம்எல்ஏக்களாகி இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் திமுகவை எதிர்க்கும் வலுவுடன் அதிமுக தான் உள்ளது. அதை மறுக்க முடியாது. அண்ணாமலைக்கு பணம் எங்கிருந்து வருகிறது என்று அமலாக்கத்துறை விளக்கம் தருமா? சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி எனது சொந்த தொகுதி. இந்த தொகுதியை நேசிப்பவன் நான். எனவே, சிதம்பரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன்” என்று தெரிவித்தார்.

Chella

Next Post

’எல்லாமே ஐஷூ சொல்லிட்டா’.. 'அதை சொன்னா நீ அவ்வளவு தான்’..!! அதிர்ச்சியில் நிக்சன்..!!

Fri Nov 10 , 2023
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது பிக்பாஸ் வீடு நீதிமன்றமாக மாறி உள்ள நிலையில், அங்குள்ள போட்டியாளர்கள் யார் மீது வேண்டும் என்றாலும் வழக்கு தொடர்ந்து தங்கள் நீதிக்காக போராட முடியும். இந்நிலையில், இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ ரிலீஸ் ஆகி உள்ளது. அதாவது, ரவீனாவின் வளர்ச்சிக்கு மணி இடையூறாக இருக்கிறார் என்று நிக்சன் வழக்கு தொடர்ந்த நிலையில், “நான் ரவீனாவின் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கிறேன் […]

You May Like