fbpx

முகக்கவசம் அணியவில்லை எனில் அனுமதி இல்லை.. மெட்ரோ நிர்வாகம் அதிரடி..

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமெடுத்துள்ளது.. அந்த வகையில் இந்தியாவில் சராசரி ஒரு நாள் பாதிப்பு 10,000-க்கும் மேல் பதிவாகி வருகிறது.. எனவே கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கவும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.. இதனிடையே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. கடந்த சில நாட்களாக 2500-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி வருகிறது..

மேலும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளான மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கைகளை கழுவுவது போன்றவற்றை மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.. மேலும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது..

இந்நிலையில் சென்னையில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.. கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.. மேலும் வணிக நிறுவனங்கள் தங்களுடைய அங்காடிகளில் ஒரே நேரத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.. மேலும் திரையரங்குகள், துணிக்கடைகள், வணிக நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் முகக்கவசம் அணியாதவர்களும் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது..

இந்நிலையில் சென்னையில் முகக்கவசம் அணியாமல், மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. ஆனால் பலரும் முகக்கவசம் அணியாமல் வருவதால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

தொடர் கனமழை..! வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை..! ஆட்சியர் அறிவிப்பு

Thu Jul 7 , 2022
தொடர் மழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர், காந்திபுரம், கணபதி, பீளமேடு, உக்கடம், பாப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட நகர் பகுதிகளிலும் வடவள்ளி, மருதமலை, தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன் பாளையம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக […]

You May Like