பிரபல சர்ச்சைக்குரிய சீரியல் நடிகையான ரேகா நாயர் தமிழ் சினிமாவின் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே பரவலாக முகமறியப்பட்டார். இவர், விஜய் டிவியில் ஆண்டாள் அழகர் தொடரில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த இவர் தொடர்ந்து சன், கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் நடிகை ரேகா நாயர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், என்னிடம் யாரவது பட வாய்ப்பு கொடுக்கிறேன் என்ற பெயரில் படுக்கைக்கு அழைக்கிறார் என்றால், அந்த நபரை எனக்கும் பிடித்து இருந்தால் போவேன், அவரை பிடிக்கவில்லை என்றால் போகமாட்டேன் என்றார்.
மேலும், பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் போது மறுத்துவிட்டாள், உங்களை யாரும் வற்புறுத்த போவது கிடையாது. ஆனால், அட்ஜஸ்ட்மெண்ட் செய்துவிட்டு ஒரு 10 வருடம் கழித்து அந்த இயக்குனர், தயாரிப்பாளர் அப்படி செய்தார் என்று கூறுவது எதனால் என கோபமாக பேசியுள்ளார்.