fbpx

’கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்’..!! ’2026இல் எந்த கட்சியுடன் கூட்டணி’..? லெஜண்ட் சரவணன் பரபரப்பு பேட்டி..!!

”நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்” என நடிகர் லெஜண்ட் சரவணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், எதார்த்தமாக நகைச்சுவை உணர்வுடன் பேசியிருந்தார். அதில் சில கருத்துகள் மத்திய அமைச்சருக்கு உடன்பாடு இல்லாததால் அவரை சந்தித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார். இதை பெரிதுபடுத்துவதற்கு ஒன்றும் கிடையாது.

எனக்கு எப்போதும் மக்கள் நலனில் அக்கறை உண்டு. காலம், நேரம், சூழல் சரியாக அமைந்தால், கண்டிப்பாக நான் அரசியலுக்கு வருவேன். வரும் 2026ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் கடும் போட்டியாக இருக்கும் என நினைக்கிறேன்.

என்னுடைய கொள்கைகளுக்கு உடன்பட்டு வரும் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவேன். கேரள உயர்நீதிமன்றத்தில் ஹேமா கமிட்டி அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. உயர்நீதிமன்றம் தக்க உத்தரவு பிறப்பிக்கும் என நம்புகிறேன். அமெரிக்கா சென்று திரும்பியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்தார்.

Read More : கிழிந்த ரூபாய் நோட்டுக்களை எப்படி வங்கியில் மாற்றுவது..? கட்டணம் எவ்வளவு..? ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு..!!s

English Summary

Actor legend Saravanan said, “I will definitely enter politics”.

Chella

Next Post

ஞானவாபி மசூதி அல்ல.. சிவன் கோவில்..!! - முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சால் சர்ச்சை!!

Sat Sep 14 , 2024
Yogi Adityanath says Gyanvapi Mosque is actually 'Lord Shiva temple'

You May Like