fbpx

’என்னுடைய திரை வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன்’..!! ’இனி நடிக்க மாட்டேன்’..!! அதிரடியாக அறிவித்த பிரபல நடிகர்..!!

பழம்பெறும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பல திரைப்படங்களிலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடித்திருக்கிறார். ஆனால், சமீப காலமாக அவர் எந்த திரைப்படங்களிலும் நடிப்பதில்லை. அது குறித்து சாய் வித் சித்ரா என்ற நிகழ்ச்சியில் நடிகர் லட்சுமணனுடன் பேசியிருக்கிறார். அதே நேரத்தில் தான் கடைசியாக நடித்த திரைப்படத்தில் கிடைத்த அனுபவங்கள் குறித்தும் வெண்ணிற ஆடை மூர்த்தி பேசியிருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

இப்போது உள்ள காலகட்டத்தில் முன்னணியில் இருக்கும் நடிகர்கள் கூட ஒரு சில திரைப்படங்கள் வெற்றி பெறாமல் போய்விட்டாலே பிறகு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காமல், இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடுகிறார்கள். ஆனால், தமிழ் சினிமாவில் ஏறக்குறைய 3 தலைமுறைக்கு மேலாக பல முன்னணி நடிகர்களோடு நடித்ததோடு திரையுலகில் தனக்கொரு அடையாளத்தையும் ரசிகர்களையும் கவர்ந்து வைத்திருப்பவர்தான் வெண்ணிற ஆடை மூர்த்தி.

இவர் சினிமாவில் மட்டுமல்லாமல் சீரியல்கள் மூலமாகவும் ரசிகர்களை என்டர்டைன்மென்ட் செய்திருக்கிறார். எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் தொடங்கி ரஜினி, கமல், அஜித், விஜய் உட்பட பல இளம் நடிகர்களோடும் இவர், நடித்திருக்கிறார். இப்படியான நிலையில், சமீபத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி அதிகமாக எந்த திரைப்படங்களிலும் காண முடிவதில்லை. அது குறித்து நடிகர் லட்சுமணன் உடன் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

அதில், நான் எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருக்கிறேன், சீரியல்களில் நடித்திருக்கிறேன், சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறேன். ஆனால், ஒரு கட்டத்தில் எனக்கு எல்லாமே போதும் என்ற நிலை வந்தது. அது நான் கடைசியாக நடித்த இட்லி என்ற திரைப்படம். நான் அந்த திரைப்படத்தில் நடிகை கோவை சரளா உடன் நடித்திருந்தேன். மிகவும் மகிழ்ச்சியான திரைப்படமாக அந்த திரைப்படம் இருந்தது. அந்த திரைப்படம் முடிவடைந்த பிறகு நடிகர் சங்கத்தில் ஒரு மீட்டிங் நடைபெற்றது. அதில் பலர் இருந்தார்கள். அந்த நேரத்தில் நான் மேடையில் பேசும்போது ஒருத்தங்களுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது உணவு, உடை, உறக்கம் தான். அதில் உறக்கம் என்பது நாமாக தேடிக்கொள்வது.. நம்முடைய உடம்பு தேடும் போது அதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆனால் உணவும், உடையும் எப்போதுமே அவசியமாக இருக்கிறது. அதில் உடை (அதாவது வெண்ணிற ஆடை மூர்த்தி) என்னுடைய பெயரிலேயே அந்த ஆடை இருக்கிறது. அதுபோல உணவு இப்போது நான் கடைசியாக நடித்திருக்கும் இட்லி என்ற படத்தில் இருக்கிறது. இந்த படத்தோடு நான் என்னுடைய நடிப்பை முடித்துக் கொள்கிறேன் என்று கூறினேன். அங்கிருந்த எல்லோரும் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனார்கள். நான் இப்படி ஒரு ரியாக்ஷன் கொடுப்பாங்க என்று கொஞ்சமும் நினைக்கல. அந்த நேரத்தில் மேடையில் இருந்த இயக்குனர் சங்கர் கூட இப்படி எல்லாம் பேசாதீங்க சார் கண்டிப்பா நீங்க என்னுடைய படத்தில் நடிக்கணும் என்று சொன்னார்.

அதற்கு நான் இல்லை.. நான் ஒரு முடிவெடுத்துவிட்டேன். இனி நடிக்கப் போவதில்லை. என்னுடைய பெயரில் இருக்கும் ஆடையும் நான் கடைசியாக உணவு தலைப்பில் உள்ள இட்லி படத்தில் நடித்திருக்கிறேன். இதுவே எனக்கு போதும் என்று சொன்னேன். அதை தான் இன்று வரைக்கும் நான் ஃபாலோ பண்ணிக் கொண்டிருக்கிறேன். இனி எந்த திரைப்படத்திலும் நான் நடிக்கப் போவது கிடையாது என்று அந்த பேட்டியில் வெண்ணிற ஆடை மூர்த்தி பேசியிருக்கிறார்.

Read More : ’எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது’..!! ’வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள்’..!! எடப்பாடி பழனிசாமி பளீச்..!!

English Summary

He himself explained the reason why the white-clad comedian Murthy left the cinema.

Chella

Next Post

பெண்களை பாதிக்கும் சிறுநீர் கசிவு பிரச்சனை.. இப்படி செய்தால் ஈஸியா கண்ட்ரோல் ஆகும்..!! - ஆய்வில் தகவல்

Mon Sep 23 , 2024
Low-impact yoga, exercise can help older women manage urinary incontinence: Study

You May Like