fbpx

’சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன்’..!! விஜய் கட்சியின் உறுதிமொழி இதுதான்..!!

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கி அரசியலில் கால் பதித்துள்ளார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு விஜய் அறிவித்துள்ளார். இந்நிலையில், கட்சியை பலப்படுத்தும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

இதன் ஒருபகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கட்சிக் கொடியினையும், கட்சியின் பாடலையும் இன்று (ஆகஸ்ட் 22) விஜய் அறிமுகம் செய்து வைக்கிறார். இந்த கட்சிக் கொடியை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து எளிமையான முறையில் அறிமுகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி, தவெக தலைவர் விஜய், தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

கட்சிக்கொடி அறிமுக விழாவுக்கு 5,000 பேர் பங்கேற்பார்கள் எனக்கூறி காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டு அனுமதி கோரியிருந்த நிலையில், 300 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுள்ளது. பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் காலை 9.15 மணிக்கு மேல் கட்சிக் கொடியை அறிமுகம் செய்வார் என்றும், தொடர்ந்து நிர்வாகிகள் இடையே 20 நிமிடம் உரையாற்றுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் எடுக்கும் உறுதிமொழிகள் வெளியாகியுள்ளன. அதில், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன், எல்லோர்க்கும் சம வாய்ப்பு கிடைக்க பாடுபடுவேன், ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவத்தை பேணிக்காப்பவராக செயல்படுவேன், மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து என்றும் மக்கள் நலச் சேவகராக கடமை ஆற்றுவேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு..!! திருமணம் ஆகாதவர்களும் இனி குழந்தைகளை தத்தெடுக்கலாம்..!!

English Summary

I will adhere to the principle of equality for all living beings and strive for equal opportunities for all

Chella

Next Post

பத்லாபூர் பாலியல் வன்கொடுமை வழக்கு - தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மும்பை உயர்நீதிமன்றம்..!!

Thu Aug 22 , 2024
Badlapur sexual abuse case: Bombay High Court takes suo motu cognizance, matter to be heard today
’வீட்டு வேலைகள் செய்ய விருப்பமில்லையா’..? ’திருமணத்திற்கு முன்பே சொல்லிவிடுங்கள்’..!! ஐகோர்ட்

You May Like