fbpx

”தமிழ்நாட்டில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை அமைப்பேன்”..!! ”நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இதற்காகத்தான்”..!! சசிகலா பரபரப்பு பேட்டி..!!

கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி சென்னை கீழ்ப்பாக்கம் ஹால் சாலையில் உள்ள நேர்ச்சை திருத்தல மாதா தேவாலயத்தில் வி.கே.சசிகலா இன்று சிறப்பு வழிபாடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பணி செய்யும் பெண்களுக்கான தங்கும் விடுதி திட்டத்தை கடந்த 2013இல் ஜெயலலிதா செயல்படுத்தினார். திமுக ஆட்சியில் பெயரை மாற்றி ‘தோழி’ என்ற புதிய திட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு சீருடை, புத்தகங்கள் முறையாக வழங்கப்படுவதில்லை. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட லேப்டாப், சைக்கிள் ஆகியவை தற்போது வழங்குவதில்லை. மாணவர்களுக்கு புத்தகம் கூட வழங்காமல் பழைய புத்தகத்தையே வாங்கி படிக்கின்றனர். ஆண்டுக்கு 100 நாள் சட்டப்பேரவையை நடத்துவதாக திமுக தெரிவித்தது. ஆனால், 4 ஆண்டுகள் கடந்தும் 134 நாட்கள் மட்டுமே சட்டப்பேரவை நடத்தப்பட்டுள்ளது.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுவது இல்லை. திமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக தமிழக – கேரளா எல்லையில் பாதுகாப்பு முறையாக இல்லாததால், தற்போது மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. திமுகவின் கணக்கெல்லாம் தமிழக மக்களிடம் செல்லாது. அதிமுகவின் வாக்கு வங்கி குறையவில்லை. திமுக அரசிடம் இருந்து தமிழக மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்போடுதான் எனது ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கிறேன். தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட BSNL..!! இனி சிம் கார்டே தேவையில்லை..!! வருகிறது eSIM..!!

English Summary

“I will re-establish Jayalalithaa’s rule in Tamil Nadu,” Sasikala said.

Chella

Next Post

Breaking | 5 முதல் 8 வகுப்பு வரை மாணவர்களின் கட்டாய தேர்ச்சி ரத்து..!! - மத்திய அரசு அறிவிப்பு

Mon Dec 23 , 2024
No detention policy gone: Students won’t be promoted to next class if they fail in class 5 or class 8

You May Like