100 சதங்கள் சாதனை எனது 24 வருட கடின உழைப்பு; எனவே இந்த சாதனையை விராட் கோலி முறியடித்தால் வருதப்படுவேன் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுகர் ட்விட்டரில் ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
நடப்பாண்டின் ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதன்படி இதுவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. பெங்களூரு அணியில் இடம் பெற்றுள்ள விராட் கோலி ஒவ்வொரு போட்டியிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். எவ்வளவுக்கு எவ்வளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறாரோ அதே போன்ற அளவிற்கு தனது ஆக்ரோஷத்தையும் வெளிப்படுத்தி விளையாடி வருகிறார்.
நடப்பு சீசனில் இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் விராட் கோலி 82 (நாட் அவுட்), 21, 61, 50, 6, 59 என்று மொத்தமாக 279 ரன்கள் சேர்த்துள்ளார். இதுவரையில் ஒரு நாள் போட்டி, டி20 மற்றும் டெஸ்ட் என்று மொத்தமாக 497 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 75 சதங்கள் வரையில் விளாசியுள்ளார். ஐபிஎல் தொடரையும் சேர்த்தால் மொத்தமாக 80 சதங்கள் வரையில் விளாசியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 229 போட்டிகளில் 221 இன்னிங்ஸ் வரையில் ஆடியுள்ளார். இந்தநிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் #AskSachin என்ற ஹேஷ் டேக்கை பதிவிட்டு அதன்கீழ் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ட்விட்டரில் பதில் அளித்தார்.
அப்போது உங்களது 100 சதங்கள் சாதனையை விராட் கோலி முறியடித்தால் உங்களது உணர்வு எப்படி இருக்கும் என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சச்சின், 100 சதங்கள் சாதனை என்பது அனைவராலும் முறியடிக்க முடியாத ஒன்று. ஆனால் விராட் கோலி வரும் 2027 உலகக் கோப்பை வரை விளையாடினால் அதை முறியடிப்பார். 100 சதங்கள் சாதனை எனது 24 வருட கடின உழைப்பு என்பதால் நான் மகிழ்ச்சியாக இருக்க மாட்டேன். சாதனைகள் முறியடிக்கப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சச்சினின் இந்த பதிவிற்கு பதிலளித்த விராட் கோலி, உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. ஆனால் வங்கதேசம் மற்றும் இலங்கை சி அணியுடன் தொடரை பிசிசிஐ ஏற்பாடு செய்யாத வரை உங்கள் சாதனையை முறியடிக்க மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன். மேலும் 2023 ஆம் ஆண்டின் உலகக் கோப்பையையும், 2023 ஆம் ஆண்டின் WTC இறுதிப் போட்டியையும் இந்தியாவுக்கு பெற்றுக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.