ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இதன் முதல் போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.
நடப்பாண்டுக்கான உலகக் கோப்பை தொடர் இன்று தொடங்குகிறது. முதல் முறையாக உலகக் கோப்பை போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் நடைபெறவுள்ளது. அந்த வகையில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்று முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது. இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதுகின்றன. அதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
அந்த வகையில் இன்று மதியம் 2 மணி அளவில் அகமதாபாத் மைதானத்தில் போட்டி தொடங்கவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் நியூசிலாந்து, இங்கிலாந்து அணியுடன் மோத உள்ளது. அகமதாபாத் மைதானம் ரன் குவிப்புக்கு ஏற்ற ஆடுகளம் ஆகும். மேலும் சுழற் பந்துவீச்சு வேகப்பந்து வீச்சு என இரண்டுமே சரிசம அளவில் இருக்கும். எனவே, விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதால் கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துள்ளனர்.
இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் களமிறங்குவது சந்தேகமாக இருக்கிறது. இதேபோன்று நியூசிலாந்து அணியில் கேப்டன் வில்லியம்சனும் விளையாட மாட்டார் என தெரிகிறது. இரு அணியிலுமே ஸ்டார் வீரர்கள் இல்லாத நிலையில் மற்ற திறமை வாய்ந்த வீரர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளன. முன்னதாக 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதே அகமதாபாத்தில் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தும் நியூசிலாந்தும் மோதி இருக்கிறது. இதில் நியூசிலாந்து அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது 96 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போல் மீண்டும் அதே மாதிரி தொடங்குவதால் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியம் ஏற்பட்டு இருக்கிறது. அந்த உலகக் கோப்பையில் இந்தியா அரை இறுதியில் இலங்கையிடம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.