fbpx

ஐசிசி உலகக்கோப்பை..!! ஓய்வு பெறுகிறார் குயின்டன் டி காக்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!! இதுதான் காரணமா..?

இந்தாண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி உலகக்கோப்பை 2023-க்குப் பிறகு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக கிரிக்கெட் வீரர் குயின்டன் டி காக் அறிவித்துள்ளார். இது தென்னாப்பிரிக்க ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்த சில நிமிடங்களில் டி காக்கின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். டி காக் 2013ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு அறிமுகமானதில் இருந்து 140 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் 17 சதங்கள் மற்றும் 29 அரைசதங்களுடன் 44.85 சராசரியுடன் 5,966 ரன்கள் எடுத்துள்ளார். டி காக்கின் முடிவு ரசிகர்களுக்கு ஒரு பெரிய ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.

ஆனால், டி20 மற்றும் ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டில் தனது வாழ்க்கையை நீடிக்க அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம். அவர் ஏற்கனவே 54 போட்டிகளில் விளையாடி 38.82 சராசரியில் 6 சதங்களுடன் 3300 ரன்கள் எடுத்த பிறகு 2021ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். டி காக் சமீபத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக கையெழுத்திட்டார். டிசம்பர் 10-21 முதல் இந்தியாவுக்கு எதிரான தென்னாப்பிரிக்காவின் டி20 தொடருடன் இணைந்து பிக் பாஷ் லீக்கில் அறிமுகமாக உள்ளார்.

Chella

Next Post

’நாட்டின் பெயரை மாற்றினால் மட்டும்’..!! ”பாரத்”-க்கு ஆதரவு கொடுத்த சேவாக்..!! பதிலடி கொடுத்த விஷ்ணு விஷால்..!!

Tue Sep 5 , 2023
ஐசிசி உலகக் கோப்பையில் இந்திய ஜெர்சியில் ‘இந்தியா’ என்பதற்குப் பதிலாக ‘பாரத்’ இருக்க வேண்டும் என்று வீரேந்திர சேவாக் கூறியுள்ள நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் பதிலடி கருத்து தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டுக்கான அழைப்பிதழில் வழக்கமாக குறிப்பிடப்படும் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதில் ”பாரத் குடியரசு தலைவர்” என அச்சிடப்பட்டுள்ளது. இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஐசிசி உலகக் கோப்பையில் இந்திய […]

You May Like