fbpx

பழைய சோறில் இத்தனை நன்மையா?? அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் வெளியிட்ட தகவல்..

தற்போது உள்ள காலகட்டத்தில் யாரை பார்த்தாலும் கால் வலி, முதுகு வலி, அந்த வலி இந்த வலி என்று பெரிய பட்டியலே போடுகின்றனர். குறிப்பாக அதிக வலிகளை லிஸ்ட் போடுவது வாலிபர்கள் தான். அந்த காலத்தில் 60, 70 வயது ஆனாலும் கூட திடகாத்திரமாக அத்தனை சுறுசுறுப்பாக இருந்தனர். ஆனால் இப்போது துணி துவைப்பதில் இருந்து, பாத்திரம் கழுவுவதற்கு கூட மிஷின் வந்துவிட்டது. ஆனால் உடம்பு முழுவது வலி, எப்போதும் அசதி.. இதற்க்கு காரணம் என்ன தெரியுமா?? நாம் நாகரீகம் என்ற பெயரில் மறந்து விட்ட பாரம்பரியமான ஒரு உணவு தான்.

ஆம், அப்படி என்ன உணவு தெரியுமா?? பழைய சாதம். பழைய சோறு, பழஞ்சோறு, ஏழைகளின் உணவு, ஐஸ் பிரியாணி... என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த உணவில் தான் பல சத்துக்கள் உள்ளது. மதியம் வடித்து, மீந்துபோன சாதத்தில் நீர் ஊற்றி வைத்தால், அடுத்த நாள் அது பழைய சாதமாகிவிடும். சோற்றை ஊறவைத்திருக்கும் தண்ணீர் அத்தனை ருசியானது; எத்தனையோ மருத்துவக் குணங்களைக்கொண்டது. உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; குளிர்ச்சியோடு, எனர்ஜியையும் சேர்த்துத் தரும் அற்புத ஆகாரம் இது.

அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் பழைய சோற்றில் இருக்கும் நன்மைகளை பட்டியலிட்டுள்ளது..

  • காலையில் பழைய சோறு சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்.
  • உடலில் அதிகமாக இருக்கும் உடல் உஷ்ணத்தைப் போக்கும்.
  • பழைய சோறில், நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கலை நீக்கி, உடல் சோர்வை விரட்டும்.
  • ரத்த அழுத்தத்தை சீராக்கும் பழைய சோறு, உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தணியச்செய்யும்.
  • ஒவ்வாமைப் பிரச்னைகளுக்கும், தோல் தொடர்பான வியாதிகளுக்கும் பழைய சோறு நல்ல தீர்வு தரும்.
  • எல்லாவிதமான வயிற்றுப் புண்களையும் பழைய சோறு ஆற்றிவிடும்.
  • புதிய நோய்த்தொற்றுகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கும்.
  • மேலும், இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்க பழைய சோறு உதவும்.

Maha

Next Post

”ரூ.29.50 லட்சத்தை ஏமாற்றிவிட்டார்”..!! இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீது பண மோசடி புகார்..!!

Wed Sep 27 , 2023
இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக அளித்த முன்பணம் ரூ.29.50 லட்சத்தை திருப்பி தராமல் ஏமாற்றுவதாக மருத்துவர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஆசிக்கான் 2018 என்ற மருத்துவ தொடர்பான அமைப்பின் அலுவலகம் (அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஒருங்கிணைப்பு) சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் செயல்பட்டு வருகிறது. இந்த அறுவை சிகிச்சை நிபுணர்களின் தேசிய மாநாட்டின் ஒருங்கிணைப்பு செயலாளர் மருத்துவர் விநாயக் செந்தில் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் […]

You May Like