fbpx

UPSC முக்கிய அறிவிப்பு…! IES மற்றும் ISS தேர்வு 2023-ன் இறுதி முடிவுகள் வெளியீடு…! முழு விவரம் உள்ளே

2023 ஜூன் 23 முதல் 25 வரை மத்தியப் பணியாளர் தேர்வாணையம் யுபிஎஸ்சி நடத்திய இந்தியப் பொருளாதாரப் பணி / இந்தியப் புள்ளியியல் பணி தேர்வு, 2023 எழுத்துத் தேர்வின் முடிவுகள் அடிப்படையிலும், அதைத் தொடர்ந்து டிசம்பர் 18 முதல் 21-ம் தேதி வரை நடந்த ஆளுமைத் தேர்வுக்கான நேர்காணல் அடிப்படையிலும், இந்தப் பணிகளின் பதவிகளுக்கு நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்ட தேர்வர்களின் தகுதி வரிசையிலான பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தியப் பொருளாதாரப் பணியில் 18 இடங்களும், இந்தியப் புள்ளியியல் பணியில் 35 இடங்களும் காலியாக இருந்தன. இந்தப் பணிகளுக்குத் தேர்வு மூலம் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இறுதி முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்கு மட்டுமே இந்த விண்ணப்பதாரர்களின் தற்காலிகத் தன்மை செல்லுபடியாகும்.

இந்தக் காலக்கெடுவிற்குள் ஆணைக்குழுவால் தேவைப்படும் ஆவணங்களை தேர்வர்கள் சமர்ப்பிக்கத் தவறினால், அவர்களின் வேட்புமனு ரத்து செய்யப்படும். மேலும் www.upsc.gov.in தேர்வாளர்களின் மதிப்பெண்கள் முடிவு வெளியிடப்பட்ட நாளிலிருந்து பதினைந்து நாட்களுக்குள் இணையதளத்தில் கிடைக்கும்.

Vignesh

Next Post

’இந்தியக் குடிமகனாக பெருமிதம்’..!! நடிகர் கமல்ஹாசன் குடியரசு தின வாழ்த்து..!!

Fri Jan 26 , 2024
குடியரசு தினத்தை முன்னிட்டு நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். நட்டின் 75-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி கடமைப்பாதையில் தேசிய கொடியை ஏற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, முப்படைகளின் அணிவகுப்பை ஏற்கிறார். இதேபோல், இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காமராஜா் சாலையில் உழைப்பாளா் சிலை பகுதி அருகே அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில், காலை 8 மணிக்கு […]

You May Like