fbpx

#சற்றுமுன்: சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கும் நாள் தள்ளிப்போக வாய்ப்பு…!

சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நாள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. தரையிறங்க சாதகமான சூழல் இல்லாத காரணத்தால் ஆகஸ்ட் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்க வாய்ப்புள்ளதாக இஸ்ரோவின் இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்

சந்திரயான்-3 விண்கலம் கடந்த 18-ம் தேதி அதன் சுற்றுப்பாதை தூரம் குறைக்கப்பட்டது. தற்போது நிலவின் தரைப்பரப்புக்கு நெருக்கமாக குறைந்தபட்சம் 24 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 134 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்று வட்டப்பாதைக்கு லேண்டர் நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நாள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்கலம் தரையிறங்க சாதகமான சூழல் இல்லை என்பதால் ஆகஸ்ட் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்க வாய்ப்புள்ளதாக இஸ்ரோவின் அகமதாபாத் இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.

சந்திரயான் -3 விண்கலம் ஜூலை 14, 2023 அன்று சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து எல்.வி.எம் -3 மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த விண்கலம் தற்போது நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும் நோக்கில் தொடர்ச்சியான சுற்றுப்பாதை மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு வந்தது. பூமி செல்லும் பாதை மற்றும் சந்திர எல்லைப் பாதை என இரண்டு கட்டங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தீர்ப்பளித்த குஜராத் ஐகோர்ட்!… அரசியலமைப்புக்கு எதிரானது!… நீதிபதிகள் கண்டனம்!

Tue Aug 22 , 2023
குஜராத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் தனது 27 வார கருவை கலைக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஆகஸ்ட் 19 தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாலியல் வன்கொடுமை காரணமாக கர்ப்பமான பெண்ணின் கருவை கலைக்க அனுமதி மறுத்த குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும், ஆகஸ்ட் 8ம் தேதி குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் உரிய உத்தரவு […]

You May Like