fbpx

ஹமாஸ் இதைசெய்யாவிட்டால் காசா கைப்பற்றப்படும்!. டிரம்பை தொடர்ந்து எச்சரிக்கை விடுத்த மற்றொரு நாடு!

Reuven azar: காசா பகுதியில் இருந்து பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்து அதிகாரத்தை கைவிட்டு ராஜதந்திர பாதையை ஏற்க வேண்டும், இல்லையெனில் இஸ்ரேல் காசாவை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும் என்று இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் தெரிவித்துள்ளார்.

காசா மீது நேற்று இஸ்ரேல் நடத்திய கடுமையான வான்வழித் தாக்குதலில் 400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல்கள் கடந்த இரண்டு மாதங்களில் மிகவும் மோசமானவை. இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஜனவரியில் தொடங்கிய கிட்டத்தட்ட இரண்டு மாத கால போர்நிறுத்தம் முடிவுக்கு வந்தது. போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் திட்டங்களை நிராகரித்ததற்காக இஸ்ரேல் ஹமாஸைக் குற்றம் சாட்டுகிறது. முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் காசாவை ஆக்கிரமிப்பது குறித்துப் பேசியிருந்தார்.

இந்தநிலையில், இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் இந்தியா டுடேவிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, காசாவில் ஹமாஸ் பொதுமக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்துகிறது. காசாவை விட்டு வெளியேறாவிட்டால் இஸ்ரேல் ராணுவத்தின் முழு பலத்தையும் ஹமாஸ் எதிர்கொள்ளும். ஹமாஸ் அதிகாரத்தை கைவிட வேண்டும். இல்லையென்றால் இஸ்ரேல் காசாவைக் கைப்பற்றும்.

மீதமுள்ள பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்க இஸ்ரேல் நீண்ட காலமாக காத்திருக்கிறது. எங்கள் பிணைக்கைதிகளை திரும்பப் பெறுவதற்கும் இந்த மோதலுக்கு ராஜதந்திர தீர்வைப் பெறுவதற்கும் ராணுவ அதிகாரத்தை பயன்படுத்துவோம். காசா மக்களுக்கு உதவக்கூடிய மிதமான தலைமை மற்றும் சர்வதேச பங்குதாரர்களிடம் அதிகாரத்தை மாற்ற இஸ்ரேல் உதவும்.

காசாவை விட்டு பாலஸ்தீனியர்களை முழுமையாக வெளியேற இஸ்ரேல் கேட்கவில்லை. நாங்கள் செய்வது என்னவென்றால், ஹமாஸ் அமெரிக்க திட்டங்களை ஏற்கவில்லை என்றால், நாங்கள் அந்தப் பகுதியைக் கைப்பற்றப் போகிறோம். துரதிர்ஷ்டவசமாக, ஹமாஸ் தலைவர்கள் பொதுமக்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். காசாவில் உள்ள முழு பாலஸ்தீன மக்களையும் ஹமாஸ் சிறைபிடித்து வைத்துள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Readmore: சென்னையில் நாளை முதல் 26ஆம் தேதி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம்..!! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட வாரியம்..!! அதிர்ச்சியில் மக்கள்..!!

English Summary

If Hamas doesn’t do this, Gaza will be captured! Another country that has repeatedly warned Trump!

Kokila

Next Post

ஐபிஎல் 2025க்குப் பிறகும் எம்எஸ் தோனி ஓய்வு பெற மாட்டாரா? இன்னும் 4 ஆண்டுகள் விளையாடுவதே திட்டம்!. சொன்னது யார் தெரியுமா?.

Thu Mar 20 , 2025
Will MS Dhoni not retire after IPL 2025? The plan is to play for another 4 years!. Do you know who said that?

You May Like