fbpx

தோற்றால் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட மாட்டேன்!. டிரம்ப் அதிரடி!

Trump: இந்த ஆண்டு நவம்பரில் தேர்தலில் தோல்வியடைந்தால், இனிமேல் அதிபர் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று டொனால் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவ. 5ம் தேதி நடைபெறும் அதிபர் பதவிக்கான தேர்தலில் முன்னாள் அதிபரான குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் தற்போதைய துணை அதிபரும், ஜனநாயக கட்சி வேட்பாளருமான கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு டிரம்ப் அளித்த பேட்டியில், ‘தற்போது நடைபெறும் தேர்தலில் நான் தோல்வியடைந்தால், அடுத்த தேர்தலில் போட்டியிடமாட்டேன். இருந்தாலும் அவ்வாறு நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. இந்த முறை நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றார். முன்னதாக 2020ம் ஆண்டில் நடந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடனிடம் டிரம்ப் தோற்றார். அதற்கு முன்னதாக, 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை டிரம்ப் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: 5.6 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்!. ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை!

English Summary

Trump says won’t run again for president if he loses in November

Kokila

Next Post

30 நாட்கள் உணவில் உப்பு சேர்ப்பதை நிறுத்தினால் என்ன நடக்கும்? அவசியம் படிங்க..!!

Tue Sep 24 , 2024
What will happen if you stop eating salt for a month? Most people don't know this

You May Like