திருவள்ளுார் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வருகை தந்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் பாலியல் குற்றவாளிகளின் ‘ஆணுறுப்புகளை’ வெட்டி எடுத்துவிடுவேன்” என ஆவேசமாக பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் இன்று சட்டமும் இல்லை.. ஒழுங்கும் இல்லை. பெண்கள் தனியாக எங்கேயும் பாதுகாப்பாக செல்லவே முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதனைத்தான் நாள்தோறும் செய்தித்தாள்களில் பார்த்து கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் சட்டமும் கிடையாது. சட்ட ஒழுங்கும் கிடையாது. தமிழகத்தில் பெண்கள் எங்கும் பாதுகாப்பாக தனியாக செல்ல முடியாத சூழல் உள்ளது.
ஐந்து வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதனை என்ன செய்யலாம். எட்டு பேர் சேர்ந்து ஒரு பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்கின்றனர், ஏழு பேர் சேர்ந்து ஒரு கல்லூரி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்வது, இதெல்லாம் நடப்பது தமிழகத்தில் தான்.
தமிழகத்தில் நான் மட்டும் ஆட்சியில் இருந்தால், வேற மாதிரி செய்திருக்க முடியும். அந்த நபர்களை அந்த இடத்தில் வெட்டி இருப்பேன். இப்படி செய்தால் வேறு யாராவது இதுபோல் சம்பவங்களில் ஈடுபடுவார்களா, அந்த பயம் வரவேண்டும் இவர்கள் வெட்டி விடுவார்கள் என்று பயம் வர வேண்டும். இந்த சம்பவங்கள் ஏன் நடைபெறுகிறது தெரியுமா? தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதை மாத்திரைகள், கஞ்சா மற்றும் மது விற்பனை நடைபெறுகிறது, இதற்கெல்லாம் காரணம் முதலமைச்சர் ஸ்டாலின்.” எனக் கூறினார்.
Read more:நாய்களுக்கு ரூ.45 கோடி செலவு செய்யும் ஹீரோ.. 116 நாய்களுக்கு சொத்து பத்திரம்..! யார் அந்த பிரபலம்..?