‘மினி சுவிட்சர்லாந்து’ என்று அழைக்கப்படும் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி உள்ளதாக கூறப்படுவதால் இந்தியா எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், 26 பொதுமக்களின் மரணத்திற்கு பழிவாங்க இந்தியா எடுக்கப்போகும் நடவடிக்கையின் மீது அனைவரின் பார்வையும் உள்ளது. இஸ்லாமாபாத் தலைமையிலான அமைப்புகளின் உத்தரவின் பேரில் எல்லை தாண்டிய பயங்கரவாதம் முற்றிலுமாக அழிக்கப்படுவதை உறுதி செய்ய பாகிஸ்தானுக்கு எதிராக இருக்கும் அனைத்து வழிகளையும் பயன்படுத்தப் போவதாக இந்தியா ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பழிவாங்க இந்தியாவின் இராணுவ நடவடிக்கை குறித்த எதிர்பார்ப்புகள் பரவி வரும் நிலையில், ரகசியமாக வெளியிடப்பட்ட 1993 CIA ஆவணம் சமீபத்தில் வெளியாகி உள்ளது. இரு நாடுகள் இடையே போர் ஏற்பட்டால் பாகிஸ்தானுக்கு பேரழிவு ஏற்படும் என்று சிஐஏ ஆவணங்கள் கணித்திருந்தன. ரகசியமாக வைக்கப்பட்ட ஆவணங்களின்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான போர் பாகிஸ்தான் இராணுவத்தையே அழிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
“1989 முதல் ஏற்பட்ட முன்னேற்றங்கள்” என்ற தலைப்பிலான இந்த தேசிய புலனாய்வு மதிப்பீடு 1993 இல் வெளியிடப்பட்டது. அந்த ஆவணத்தில் இரு நாடுகளுக்கும் இடையே முழுமையான போரைத் தூண்டக்கூடிய காரணிகள் மற்றும் யாருக்கு அதிகமாக இழப்பு ஏற்படும் என்பது குறித்து பகுப்பாய்வு செய்யப்பட்டது.
அந்த ஆவணத்தில் “ இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பு சுமார் 20 சதவீதம் இருப்பதாகவும், இரு நாடுகளின் தலைவர்களும் போரைத் தவிர்க்க விரும்பினர் என்றும் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானுடன் போரைத் தொடங்குவதில் இந்தியாவுக்கு எந்த மூலோபாய ஆர்வமும் இல்லை என்றும் கூறப்பட்டிருந்தது.
மேலும் “ இந்தியா – பாகிஸ்தான் இடையே மற்றொரு போர் ஏற்பட்டால் அதன் செலவுகள் அதிகமாக இருக்கும் என்றும் கவலை கொண்டிருந்தன. எனவே, இரு நாடுகளும் “பொருளாதார சீர்திருத்தத் திட்டங்களில்” கவனம் செலுத்த விரும்புகின்றன, இராணுவச் செலவினங்களைக் கட்டுப்படுத்த விரும்புகின்றன, மேலும் ஒரு போர் பொது மற்றும் தனியார் வெளிநாட்டு மூலதனத்தை துண்டிக்க வழிவகுக்கும் என்று அஞ்சுகின்றன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் போர் என்பது முதல் நோக்கம் இல்லை என்பது அந்த பகுப்பாய்வில் கண்டறியப்பட்டாலும், காஷ்மீர் பிரச்சினைகள், உள் தலையீடு மற்றும் வகுப்புவாத சம்பவங்கள் போன்ற முக்கிய பிரச்சனைகள் காரணமாக போர் உருவாகும் சூழல் உருவாகிறது. இது இறுதியில் முன்கூட்டிய தாக்குதலைத் தூண்டக்கூடிய உளவுத்துறை தோல்விகள் உட்பட தவறான கணக்கீடுகள் மூலம் போரின் வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடும்.
எனவே, இரு நாடுகளும் “பொருளாதார சீர்திருத்தத் திட்டங்களில்” கவனம் செலுத்த விரும்புகின்றன, இராணுவச் செலவினங்களைக் கட்டுப்படுத்த விரும்புகின்றன, மேலும் ஒரு மோதல் பொது மற்றும் தனியார் வெளிநாட்டு மூலதனத்தை துண்டிக்க வழிவகுக்கும் என்று அஞ்சுகின்றன”. என்று கூறப்பட்டுள்ளது.
அந்த CIA ஆவணத்தில் மேலும் “ இந்தியாவின் வளர்ந்து வரும் இராணுவ ஆதிக்கத்தால் பாகிஸ்தான் மேலும் அச்சுறுத்தப்படலாம். இது பாகிஸ்தானின் ‘வெளிப்படையான’ அணு ஆயுதங்களைப் பயன்படுத்துதல் போன்ற ஸ்திரமின்மை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
கடந்த 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதலில் மொத்தம் 5 பயங்கரவாதிகள் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களில் மூன்று பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள், மேலும் இருவர் உள்ளூர் போராளிகள் என்றும் இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. அவர்கள் பயன்படுத்தும் உருது மொழி பாகிஸ்தானின் சில பகுதிகளில் பேசப்படுகிறது என்று பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சந்தேக நபர்களில் ஒருவர் கடந்த ஆண்டு IAF கான்வாய் மீதான தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. உள்ளூர் தீவிரவாதிகள் இருவரும் 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்குச் சென்று பயிற்சி பெற்று, கடந்த ஆண்டு பள்ளத்தாக்குக்குத் திரும்பியதாக நம்பப்படுகிறது.
அவர்கள் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புடன் தொடர்புடையவர்கள், மேலும் இந்த தாக்குதலை நடத்த லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ் கூட்டணி அமைத்ததாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகளின் புகைப்படங்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். மேலும் அவர்களை பற்றிய தகவல்களை தெரிவிப்போருக்கு தலா ரூ.20 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது.