fbpx

PM Modi | “மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பங்குச்சந்தை வீழ்ச்சி அடையலாம்..” முதலீட்டாளர் சங்கர் சர்மா கணிப்பு.!!

PM Modi: 2024 ஆம் வருட பொது தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பங்குச்சந்தையில் பெரிய அளவு வளர்ச்சி இருக்காது என முன்னணி முதலீட்டாளர் சங்கர் சர்மா தனது கணிப்பை தெரிவித்துள்ளார்.

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற 7-ஆம் தேதி நடைபெற இருக்கிறது . பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

5 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த அரசியல் நிகழ்வு ஒவ்வொரு இந்தியரின் சேமிப்பு மற்றும் முதலீடு உள்ளிட்ட முக்கிய அம்சங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. தேர்தல் முடிவுகள் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சந்தை நிலவரங்களில் மாற்றத்தை கொண்டு வரலாம். மேலும் இது நாட்டின் எதிர்காலத்திற்கு முக்கியமானதாக அமைகிறது. இதனால் பெரும்பாலானவர்களும் தேர்தல் செயல்முறையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்

இந்நிலையில் முன்னணி பங்குச்சந்தை முதலீட்டாளரான சங்கர் சர்மா 2024 ஆம் வருட தேர்தல் பற்றிய கருத்துக்கணிப்பு மற்றும் தேர்தல் முடிவுகள் பங்குச் சந்தையில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய தனது கணிப்பை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக குறிப்பிட்டுள்ள அவர் பிரதமர் மோடி(PM Modi) தலைமையிலான பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெரிய மாற்றங்கள் இருக்காது என குறிப்பிட்டுள்ளார். மேலும் பங்குச்சந்தை சிறிது வீழ்ச்சி அடையலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஆரம்பத்தில் பங்குச்சந்தை வீழ்ச்சியை சந்திக்கும். அதன் பிறகு மனதைக் கவரும் வகையில் மிகப்பெரிய ஏற்றத்தை சந்திக்கும் என தெரிவித்திருக்கிறார். ஏனென்றால் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் முந்தைய ஆட்சியில் செய்தது போல் ‘LTCG’-ஐ பூஜ்ஜியமாக்குவார்கள் என தெரிவித்திருக்கிறார்.

Read More: Viral Video | சிறுமியை ஆட்டுவித்த பேய்.!! அந்தரத்தில் மிதக்கும் பள்ளி மாணவி.!! இணையதளத்தில் வைரலான திகில் வீடியோ.!!

Next Post

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! தமிழ்நாடு அரசு அதிரடி முடிவு..!!

Thu May 2 , 2024
தமிழ்நாட்டில் பாமாயில், துவரம் பருப்புகளுக்கு தட்டுப்பாடு உள்ளதாகவும், ரேஷனில் இந்த பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவி வருவதாகவும் தகவல் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. ரேஷன் கடைகளில், சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ், 1 கிலோ கனடா மஞ்சள் பருப்பு 30 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இவற்றை, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், தனியார் நிறுவனங்களிடம் இருந்து […]

You May Like