“நான் நல்ல சூழ்நிலையில் வளர்ந்தது போல, எனது தந்தையும் வளர்ந்திருந்தால் தவறான வழிக்கு போயிருக்க மாட்டார்” என்று வீரப்பன் மகள் வித்யாராணி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழக அரசியல் தளத்தில் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களும், மத்திய-மாநில அரசுகளின் திட்டங்களின் குறைகளை சுட்டிக்காட்டி மக்களிடையே வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அந்த வகையில், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரப்பன் மகள் வித்யா ராணி போட்டியிடுகிறார். தற்போது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இன்று தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில், பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், “எனது பெற்றோர் வளர்ப்பில் நான் வளரவில்லை. நல்ல சூழலில் நான் வளர்ந்ததால் நல்ல முறையில் வளர்ந்து நன்றாக படித்தேன்.
இதுபோன்ற சூழல் எனது தந்தைக்கும் கிடைத்திருந்தால் தவறான வழிக்கு போயிருக்க மாட்டார். எனது தந்தை கிராமத்தில் எத்தனை பேர் சந்தனமரத்தை வெட்டி, தந்தங்களை கடத்தினார்கள். எனது தந்தை மட்டும் தான் செய்தாரா? வாங்கியவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று நீங்கள் மலையை உடைத்து விற்பதும் திருட்டு தானே?. நாளை உங்கள் பிள்ளைகளும் நடுரோட்டில் தட்டேந்தி நிற்பார்கள்” என்று உருக்கமாக பேசினார்.
Read More : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு இந்த நிலைமையா..? படுக்கைக்கு அழைத்த டைரக்டர்..!! ஓபன் டாக்..!!