இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்ததாக நேற்று மத்திய அரசு அறிவித்தது. இது பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களின் குடியுரிமைகளை பாதிக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்திய அளவில் பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பல்வேறு மாநிலங்களில் இதை எதிர்த்து போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சியமைத்தால், சிஏஏ சட்டம் திரும்பப் பெறப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசிதரூர் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பாஜகவின் தேர்தல் ஆதாயத்துக்காகவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 4 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த சட்டம் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த சட்டம், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது” என்றார்.
Read More : Lok Sabha | திமுக கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டி..? முழு விவரம் உள்ளே..!!