பான் கார்டு தற்போது அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாக மாறிவிட்டது.. தற்போது பான் கார்டின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.. வரி செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு வங்கி பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு பயன்படுகிறது… வங்கிக் கணக்கைச் செயல்படுத்தும் போதும், டெபிட் அல்லது கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போதும், பான் கார்டு எண் தேவைப்படும்.

எனினும் உங்களின் பான் கார்டு தொலைந்துவிட்டால், இப்போது பயப்பட தேவையில்லை. ஏனெனில் பான் கார்டை பெறும் செயல்முறை இப்போது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. பான் கார்டை பெறுவதற்காக, இனி வரிசையில் நிற்க வேண்டியதில்லை. 10 நிமிடங்களில் பான் கார்டை பெறலாம். இதற்காக வருமான வரித்துறை ஒரு புதிய வசதியை இ-ஃபைலிங் போர்ட்டலில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒருவரின் ஆதார் எண்ணின் அடிப்படையில் பான் அட்டையை வழங்குகிறது.
ஆன்லைனில் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் நபரின் மொபைல் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்… அவரின் பிறந்த தேதி ஆதார் அட்டையில் இருக்க வேண்டும்.. மேலும் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் தேதியில் அவர் மைனராக இருக்கக்கூடாது.
பான் கார்டை எப்படி பெறுவது..?
- உடனடி பான் கார்டைப் பெற, முதலில் www.incometax.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
- முகப்புப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள ‘Instant e-PAN’விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- Get New e-PAN என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடவும்.
- ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிடவும்.
- ஆதார் விவரங்களை சரிபார்க்கவும். உங்கள் மின்னஞ்சல் ஐடியைச் சரிபார்த்து, உங்கள் இ-பான் கார்டை பதிவிறக்கவும்.