தமிழ்நாடு முழுவதிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளி திறக்கப்பட இருந்த நிலையில், தற்போது வெப்பம் அதிகமாக காணப்படுவதால் பள்ளி திறப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்தது.
இதனை பரிசீலனையில் எடுத்துக் கொண்ட தமிழக அரசு, ஜூன் மாதம் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தது ஆகவே பள்ளிகள் திறக்கப்படுவதற்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தான் பள்ளி சீருடையுடன் வருகை தரும் மாணவர்களை இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என அரசு பேருந்து நடத்துனர்களுக்கு போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. சீருடை அணிந்திருந்து, அல்லது அடையாள அட்டைகளை வைத்திருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விட்டால் நடத்துனர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்திருக்கிறது.