குளிர்சாதன பெட்டிகள் பொதுவாக 24 மணி நேரமும் இயங்க கூடியதாக தான் தயாரிக்கப்படுகின்றன. அவ்வாறு 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருந்தாலும் குளிர்சாதன பெட்டிக்கு ஒன்றும் ஆகாது. குளிர்சாதன பெட்டி சீராக செயல்பட்டு உணவு பொருட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கும். இந்த சூழலில், குளிர்சாதன பெட்டியை 1 அல்லது 2 மணி நேரம் ஆஃப் செய்து வைத்தால், அதன் வெப்பநிலை மாறும். இதன் காரணமாக பெட்டிக்குள் இருக்கும் உணவு பொருட்கள் கெட்டுப்போக வாய்ப்புள்ளது.
எனவே, குளிர்சாதன பெட்டி 24 மணி நேரமும் இயங்குவதுதான் சரியானதாக இருக்கும். அதுமட்டுமன்றி 1 அல்லது 2 மணி நேரம் குளிர்சாதன பெட்டியை அணைத்து வைத்தால் அது பெரிய மாற்றத்தை கொடுக்காது. அதாவது குளிர்சாதனப்பெட்டியை ஆப் செய்தவுடன், அதன் உள்ளே வெப்பநிலை உயரத் தொடங்கும். சிறிது நேரம் கழித்து நீங்கள் குளிர்சாதனப்பெட்டியை ஆன் செய்யும்போது, கம்ப்ரசர் குளிர்சாதனப்பெட்டியை அதே வெப்பநிலையில் மீண்டும் குளிர்விக்க அதிக நேரம் எடுக்கும். மேலும், அதைச் செய்வதற்கு இன்னும் அதிக மின்சாரம் செலவழிக்கும்.
அத்துடன் நவீன குளிர்சாதனப்பெட்டிகள் ஒரு தெர்மோஸ்டாட் மற்றும் ஒரு ஆட்டோ-கட்-ஆஃப் அம்சத்துடன் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் வெப்பநிலையை அடைந்தவுடன் கம்ப்ரசர் தானாகவே அணைக்கப்படும். இது குளிர்சாதன பெட்டியை குளிர்ச்சியாகவும், மின்சாரத்தை சேமிக்கவும் உதவும். எனவே, நீங்கள் வெளியூர் பயணமாக எங்காவது செல்ல விரும்பினால், குளிர்சாதன பெட்டியில் இருக்கும் பொருட்களை வெளியே எடுத்து வைத்துவிட்டு அணைத்து வையுங்கள். மாறாக 1 அல்லது 2 மணி நேரம் மட்டும் அணைத்து வைப்பது சிறந்த தேர்வாக இருக்காது.
Read More : பிரபல ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!! அதுவும் ’Work From Home’..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!