இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுவுக்கு இடையேயான போர் 6ஆம் நாளை எட்டியுள்ளது. முதலில் ஹமாஸ் குழு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய நிலையில், தற்போது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக காசா நகர் பகுதியே இருளில் மூழ்கியுள்ளது. உணவு குடிநீர் மின்சாரம் போன்ற அடிப்படை தேவைகளுக்காக மக்கள் தவித்து வருகின்றனர், 5,000 மேல் பாலஸ்தீன மக்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் மின்சாரம் இல்லாத காரணத்தினால் அறுவை சிகிச்சை போன்ற மருத்துவ உதவிகள் அளிக்க முடியாமல் இருக்கிறது.
இஸ்ரேலை சேர்ந்த சுமார் 150 பேரை ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். இந்நிலையில் தற்போது இஸ்ரேல் தரப்பில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் இஸ்ரேல் பணயக் கைதிகளை விடுவிக்காதவரை காசா நகரத்திற்கு மின்சாரம் வழங்கப்போவதில்லை என இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. பணயக் கைதிகள் 150 பேரில் யூத குழந்தைகள் மற்றும் பெண்கள் இருக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளது. வரைகலை ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலுக்குள் அனுப்பும் வரை மின்சாரம் தரப்போவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசா நகரத்தில் இருந்த மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்கனவே எரிபொருள் தீர்ந்த காரணத்தால் நேற்றைய தினத்தில் இருந்து 1KW மின்சாரம் கூடாது இல்லாத நிலைய ஏற்பட்டுள்ளது, ஐநா சார்பில் தாக்குதலில் உயிரிழந்த உடல்களை மீட்க பேட்டரி, ஜெனெரேட்டர்கள் போன்ற அடிப்படை தேவையான விஷயங்கள் செய்யப்பட்டு வருகிறது.