fbpx

’அடுத்த ஊழல் பட்டியலை வெளியிட்டால் திமுக ஆட்சி கவிழ்ந்து விடும்’..! – அண்ணாமலை எச்சரிக்கை

அடுத்த ஊழல் பட்டியலை வெளியிட்டால் திமுக ஆட்சி கவிழ்ந்து விடும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ”சொத்து வரி, மின்சாரம், பால் என அனைத்தையும் விலை உயர்த்தியதுதான் திமுக அரசின் சாதனை. தவறை சுட்டிக் காட்டினாலும், பாடம் கற்றுக் கொள்ளத் தயாராக இல்லாத அரசு இந்த திமுக அரசு. மக்கள் தான், இந்த விடியா அரசை கேள்வி கேட்க வேண்டும். மத்திய அரசு சொல்லித்தான் விலையை உயர்த்தியதாக பொய் சொல்கின்றனர். மத்திய அரசு மீது பழி போடுவது மட்டுமே மாநில அரசின் வாடிக்கையாக இருந்து வருகிறது. தினமும் விலை உயர்த்துவது பற்றி மட்டுமே முதல்வர் யோசித்துக் கொண்டிருக்கிறாரோ என தோன்றுகிறது.

’அடுத்த ஊழல் பட்டியலை வெளியிட்டால் திமுக ஆட்சி கவிழ்ந்து விடும்’..! - அண்ணாமலை எச்சரிக்கை

ஆட்சி செய்யத் தெரியாத, மனசாட்சி இல்லாத மாநில அரசின் கையில் மாட்டிக் கொண்டு உள்ளோம். திமுகவின் மெத்தனமும், போலீசாரின் செயல் இன்மையும் தான் கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு காரணம். பாஜக நடவடிக்கையால் தான், சிபிசிஐடி விசாரணை நடக்கிறது. சம்பவம் நடந்த பின், 4 நாட்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எஸ்கேப் ஆகிவிட்டார். பாஜக மீது பழி போடுவதை மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.

’அடுத்த ஊழல் பட்டியலை வெளியிட்டால் திமுக ஆட்சி கவிழ்ந்து விடும்’..! - அண்ணாமலை எச்சரிக்கை

நாட்டின் இறையாண்மையை சீர்குலைக்கும் என்பதால், போலி பாஸ்போர்ட் ஊழலில் தொடர்புடைய அதிகாரிகள் பற்றிய ஆவணங்களை, ஆளுநரிடம் கொடுத்துள்ளோம். தற்போது அமைச்சர்களை சொந்த ஊருக்குள்ளேயே அனுமதிக்காத நிலை ஏற்பட்டுள்ளது. திமுகவினர் இன்னும் நான்கு ஆண்டுகள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அடுத்த ஊழல் பட்டியலை வெளியிட்டால் திமுக ஆட்சி கவிழ்ந்து விடும்”. இவ்வாறு அவர் கூறினார்.

Chella

Next Post

ஈஷா யோகா மையத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் தீவிர விசாரணை..

Fri Jul 22 , 2022
கோவை ஈஷா யோகா மையத்தில் ஆந்திராவை சேர்ந்த ரமணா என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.. கோவை வெள்ளையங்கிரி மலையடிவாரத்தில் சத்குருவின் ஈஷோ யோகா மையம் அமைந்துள்ளது.. இங்கு பிரம்மாண்டமான சிவபெருமான சிலை நிறுவப்பட்டுள்ளது.. தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வருகை புரிகின்றனர்.. அந்த வகையில், ஆந்திராவை சேர்ந்த 28 வயதான ரமணா என்ற நபர் மன அழுத்தம் காரணமாக யோகா பயிற்சி மேற்கொள்ள ஈஷா […]
25 நாட்களுக்கு ரூ.2.5 கோடி தொலைபேசி கட்டணம் விதித்த BSNL..! - ஈஷா விளக்கம்

You May Like