fbpx

பான் கார்டு வைத்திருப்போர் இந்த தவறுகளை செய்தால்.. ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டும்..

பான் கார்டு என்பது தற்போது முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக மாறிவிட்டது.. வங்கிக் கணக்குகளை தொடங்குதல், வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்தல், டிமேட் கணக்குகளைத் தொடங்குதல் போன்ற அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைகளுக்கும் பான் கார்டு முக்கியமான ஆவணமாகும். ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்தின் வரிப் பொறுப்பை மதிப்பிடுவதில் இன்றியமையாததாகவும் பான் எண் இருக்கிறது.. வரி ஏய்ப்புக்கான வாய்ப்புகளைக் குறைக்கவும் பான் எண் உதவுகிறது.

இருப்பினும், ஒரு தனி நபர் ஒரு பான் கார்டை மட்டுமே வைத்திருக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகள் இருந்தால், அந்த நபர், ரூ. 10,000 அபராதம் செலுத்த வேண்டும். மேலும் தவறான பான் தகவலை வழங்கும் நபருக்கு மூலம் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம். எனவே, உங்களிடம் இரண்டு பான் கார்டுகள் இருந்தால், அதில் ஒன்றை வருமான வரித்துறையிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.

உங்கள் இரண்டாவது பான் கார்டை எப்படி ஒப்படைப்பது..?

  • வருமான வரித்துறையின் incometaxindia.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடவும்.
  • ‘Request for new PAN card/change’ or ‘Correction PAN data’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, ஏதேனும் நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் (NSDL) அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும்.

நீங்களே முன்வந்து கூடுதலாக உள்ள பான் கார்டை ஒப்படைத்தால் அபராதம் விதிக்கப்படாது.. ஆனால் உங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகள் இருப்பது வருமான வரித்துறையால் கண்டறியப்பட்டால் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.. இதனிடையே பான் கார்டு தொலைந்துவிட்டால், அதை உடனடியாக பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது..

உடனடி பான் எண்ணை எப்படி பெறுவது..?

  • https://www.incometax.gov.in/iec/foportal என்ற வருமான வரி இணையதளத்தில் உள்நுழையவும்
  • இப்போது ‘Instant e-PAN’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • அடுத்து, ‘New e-PAN’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது உங்கள் பான் எண்ணை உள்ளிடவும்.
  • உங்கள் பான் எண் உங்களுக்கு நினைவில் இல்லை என்றால், உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடவும்.
  • பின்னர் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாகப் படித்துவிட்டு ‘Accept’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP வரும், அதை உள்ளிடவும்.
  • இப்போது கொடுக்கப்பட்ட விவரங்களைப் படித்த பிறகு ‘Confirm’.
  • இப்போது புதிய பான் அட்டை உங்கள் மின்னஞ்சல் ஐடிக்கு PDF வடிவத்தில் அனுப்பப்படும்.
  • அதிலிருந்து உங்கள் ‘e-PAN’ ஐ பதிவிறக்கம் செய்யலாம்.

Maha

Next Post

71,000 பேருக்கு பணி நியமன ஆணை.. பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்..

Fri Jan 20 , 2023
மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் அமைப்புகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுமார் 71,000 பேருக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.. வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ‘ரோஸ்கர் மேளா’ என்ற திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஆண்டு அறிவித்தார்.. இந்த திட்டம், கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், இளைஞர்களுக்கு அதிகாரமளிப்பதற்கும், தேசிய வளர்ச்சியில் ஈடுபடுவதற்கும் முக்கியமான வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த […]
’

You May Like