fbpx

வீட்டின் இந்த இடத்தில் செருப்பு இருந்தால் தரித்திரம் வந்து சேருமாம்!! வாஸ்து சொல்வது என்ன?

இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. வாஸ்து சாஸ்திரத்தில், காலணிகளை எப்படி கழற்றி வைப்பது என்பது பற்றியும் காலணிகள் மற்றும் செருப்புகளை தலைகீழாக வைப்பதினால் வீட்டில் ஏற்படும் எதிர்மறை சக்தியை பற்றியும் இந்த பகுதியில் தெரிந்துக் கொள்ளலாம்.

வீட்டின் படுக்கையறையில் செருப்புகளை ஒருபோதும் வைக்கக்கூடாது. அப்படி தொடர்ந்து வைத்தால், திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை அதிகரிக்கும். உங்கள் வீட்டில் துளசி செடி இருந்தால் அதன் அருகில் செருப்புகளை கழட்டி வைக்க கூடாது. துளசி செடி புனிதமாக கருதப்படுகிறது. எனவே வீட்டில் நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும்.

புதிதாக இருந்தாலும் பழையதாக இருந்தாலும் வீட்டின் அடுப்படியில் செருப்புகை வைக்க கூடாது. உணவு புனிதமானது என்பதால் அந்த இடத்தில் செருப்பை வைத்தால் வீட்டில் நல்லது நடக்காது.  ஜோதிட சாஸ்திரத்தின் படி, வடகிழக்கு திசையில்  செருப்புகளை வைக்க கூடாது. இது அசுபமாக பார்க்கப்படுகிறது. இதனால் வீட்டில் நிதி நெருக்கடி மற்றும் நிதி இழப்பு ஏற்படலாம்.

வாஸ்து சாஸ்திரப்படி வீட்டின் முன்பக்க வாசலில் செருப்புகளை கழட்டி வைக்கக் கூடாது. இதன் காரணமாக வீட்டிற்கு வரும் லட்சுமி தேவி வராமல் போகலாம். இதனால் நிதி இழப்புகள் ஏற்படும். வடக்கு அல்லது கிழக்கு திசையில் ஷூ மற்றும் செருப்புகளை கழற்றினால் அன்னை லக்ஷ்மி கோபப்படுவார் என கூறப்படுகிறது. இது வீட்டின் பொருளாதார நிலையை பலவீனப்படுத்துகிறது. அதுமட்டும் அல்ல, வீட்டில் வறுமையை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை மோசமடையலாம்.

வாஸ்து சாஸ்திரங்களின்படி, காலணிகள் மற்றும் செருப்புகளை வீட்டில் ஒருபோதும் தலைகீழாக வைக்கக்கூடாது. இவ்வாறு செய்வதால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும். இது குடும்பத்தின் மகிழ்ச்சியையும் அமைதியையும் சீர்குலைக்கிறது. அதனால் தான் ஷூ, செருப்புகளை தலைகீழாக வைக்கக் கூடாது என கூறப்படுகிறது. இதனால், வீட்டில் வறுமை ஏற்படும்.

Read more ; பிக் பாஸ் வீட்டில் சிவகார்த்திக்கேயன்.. தேசியக் கொடியை பிளர் செய்த விஜய் டிவி..!! என்ன காரணம்?

English Summary

If there are sandals in this place of the house, poverty will come!! What does Vastu mean?

Next Post

பிரதமர் சூரிய சக்தி மேற்கூரை திட்டத்தின் கீழ் இலவச மின்சாரம்...! தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் அதிரடி உத்தரவு

Sun Oct 27 , 2024
Free electricity under PM Solar Rooftop Scheme

You May Like