fbpx

‘சத்தம் வந்துச்சுன்னா குத்திருவேன்’..!! ரயிலை கடத்திய இளைஞர்..!! நடுங்கிப்போன பயணிகள்..!! திகில் சம்பவம்..!!

பேருந்தை கடத்துவது, ரயிலைக் கடத்துவது போன்ற சம்பவங்களை நாம் சினிமாவில் தான் பார்த்திருப்போம். உள்ளே புகுந்து பயணிகளைப் பணைய கைதிகளாக வைத்து மிரட்டும் காட்சிகளைப் பார்த்தாலே திக்திக் என இருக்கும். ஆனால், இப்படியொரு சம்பவம் தான் இப்போது சுவிட்சர்லாந்தில் நிகழ்ந்துள்ளது. சுமார் 4 மணி நேரம் நீட்டித்த இந்த சம்பவம் பகீர் கிளப்புவதாக இருக்கிறது.

நேற்று வியாழன் இரவு சுவிட்சர்லாந்தின் ரயில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரயிலைக் கடத்திய அந்த நபர் கோடாரி மற்றும் கத்தியை ஆயுதமாக வைத்துள்ளார். அவர் ஃபார்ஸி மற்றும் ஆங்கிலத்தில் பேசியதாகக் கூறப்படுகிறது. அந்த நபர் தனது தேவைகளை போலீசாருக்கு கூறி மிரட்டியுள்ளார். போலீசார் ஆரம்பத்தில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இருப்பினும், ஒரு கட்டத்தில் ரயில் உள்ளே அதிரடியாக நுழைந்த போலீசார் அந்த கடத்தல்காரரைச் சுட்டுக் கொன்றனர்.

இதையடுத்து பணைய கைதிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். போலீசார் ரயிலின் உள்ளே புகுந்த போது அவர்களைத் தாக்கக் கோடாரியுடன் அந்த நபர் பாய்ந்ததாகவும் இதனால் வெறு வழியில்லாமல் சுட்டுக் கொன்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தக் கடத்தலில் ஈடுபட்ட நபர் யார்? அவர் எதற்காகச் செய்தார்? என்பது குறித்த தகவல்களை போலீசார் இதுவரை வெளியிடவில்லை. அந்த நபர் மொத்தம் 14 பயணிகள் மற்றும் நடத்துநர் என மொத்தம் 15 பேரைக் கடத்தி வைத்திருந்தார். மாலை 6.35 மணிக்கு இந்த கடத்தல் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், சுமார் 4 மணி நேரம் கழித்து இரவு 10.30 மணிக்குப் பணைய கைதிகள் அனைவரும் மீட்கப்பட்டதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

பிரம்மாண்டம்..!! சொந்தமாக தொழில் தொடங்கிய நடிகை சினேகா..!! என்ன பிசினஸ் தெரியுமா..?

Fri Feb 9 , 2024
நடிகை சினேகா தற்போது புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சினேகா. பல ரசிகர்களுக்கும் இன்றும் இவர் கனவுக்கன்னியாக இருக்கிறார். புன்னகை அரசி என்ற செல்ல பெயருடன் அழைக்கப்படும் இவர், தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் “GOAT” படத்தில் நடித்து வருகிறார். அந்தவகையில் சமீபத்தில், சினிமா பிரபலங்கள் பலரும் சினிமா தாண்டியும் வேறு துறைகளிலும் […]

You May Like