fbpx

இந்த மாதிரி கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தால் இனி அவ்ளோதான்!!! அமைச்சர் எச்சரிக்கை

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே, கீழ்பவானி கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதை அடுத்து தமிழ்நாடு வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், புதிதாக கட்டப்படும் கட்டிடங்களில் விதிமீறல் இருந்தால் சீல் வைக்கப்படும். கடந்த காலங்களைப்போல் புதிய கட்டுமானங்களில் விதிமீறல்கள் இப்போது அனுமதிக்கப்பட மாட்டாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

புதிய கட்டுமானத்தின் ஒவ்வொரு நிலையும் ஆய்வு செய்து Completion சான்று இருந்தால் மட்டுமே மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு பெற முடியும். அரசு மற்றும் தனியார் துறை கட்டுமான நிறுவனங்கள் சட்ட திட்டங்களை முழுமையாக பின்பற்ற வேண்டும். விதிகளை மீறி கட்டுமானம் கட்ட உரிமையாளர் கூறினாலும் பொறியாளர் அனுமதிக்ககூடாது. அவ்வாறு அனுமதிக்கும் பட்சத்தில், அக்கட்டிடம் பூட்டி சீல் வைக்கப்படும் என தமிழ்நாடு வீட்டுவசதித்துறை அமைச்சர் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

Kathir

Next Post

பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்- அரசு அறிவிப்பு...

Wed Dec 28 , 2022
புதுச்சேரியில் புதிய வகை கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தற்போது BF.7 வகை கொரோனா வைரஸ்-ன் தாக்கம் வேகம் எடுத்துள்ளது. சீன மட்டும் இல்லாமல் தென்கொரிய ஜப்பான் போன்ற பல நாடுகளில் இந்த BF.7 வகை கொரோனா அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் அதனுடைய பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டாலும் அதிக இழப்பு இல்லை. இந்த புதிய வகை கொரோனா பரவலை தடுக்க […]

You May Like