இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படத்தின் உண்மையான மாமன்னன் முன்னாள் சபாநாயகர் தனபால் தான் என்று சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தான் இது தொடர் உரையாற்றியுள்ள முன்னாள் சபாநாயகர் தனபால், மாமன்னன் திரைப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. என்னுடைய உழைப்பிற்கு அமைப்பு செயலாளர், அமைச்சர் மற்றும் சபாநாயகர் என்று பல்வேறு பொறுப்புகளை வழங்கினார் ஜெயலலிதா என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் நேற்று முன்தினம் வெளியான இந்த திரைப்படத்தை தமிழக முதலமைச்சரும், திமுகவின் தலைவரும், மற்றும் உதயநிதி ஸ்டாலினின் தந்தையுமான ஸ்டாலின் திரையரங்குக்கு சென்று பார்த்தார் என்பது பலருக்கும் தெரியும். அதோடு மட்டுமல்லாமல் இந்த படத்தை பற்றிய விமர்சனத்தையும் அவர் முன் வைத்திருந்தார். மேலும் இந்த திரைப்படம் பலரின் நல் விமர்சனங்களையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில் தான் மாமன்னன் திரைப்படம் என்னுடைய சாயலில் வெளியாகி இருந்தால் அது நிச்சயம் அம்மாவுக்கு கிடைத்த வெற்றி என்று முன்னாள் சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து அந்த நிறுவனத்தின் நிறுவனரான உதயநிதியே நடித்து நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் பல நல்ல விமர்சனங்களையும் மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.